காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்ற பெரிய கமிட்மெண்டிற்கு மனமும் குணமும் ஒத்துப்போனால் மட்டும் போதாது. அவை மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமைய சில ராசி பொருத்தங்களும் வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். ஒரு சில ராசிகளுகளை உடையோருக்கு குறிப்பிட்ட ராசிக்காரர்களுடன் மட்டும்தான் ஒத்துப்போகுமாம். இவர்கள் ஜோடி சேர்ந்தால் வாழ்க்கை நன்றாகவே இருக்குமாம். அப்படி சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஜோடியான ராசிகள் யார் யாரென பார்ப்போமா..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் மற்றும் துலாம்:


மேஷம் மற்றும் துலாம் ராசி உடையோர், ஒருவரை ஒருவர் சரியாக பேலன்ஸ் செய்யும் ஜோடிகளாக இருப்பார்களாம். இதில், மேஷ ராசிக்காரர்கள் எதை எடுத்தாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்பவர்களாக இருப்பார்களாம். ஆனால் அவர்களுக்கு ஜோடியாக துலாம் ராசிக்காரர்கள் வந்தால், மேஷத்திற்கு அறிவுரை கூறும் இடத்தில் இருப்பர்களாம், மேஷ ராசிக்காரர்கள் குழந்தை தனமாக செய்யும் விஷயங்களை ரசிக்கவும் அது தப்பென்று தெரிந்தால் அதை அடக்கவும் துலாம் ராசிக்காரர்களுக்கு தெரியுமாம். 


மேலும் படிக்க | காஜல் அகர்வாலின் பள பள தேகத்திற்கு இதுதான் காரணம்..! நீங்களும் ட்ரை பண்ணுங்க..!


ரிஷபம் மற்றும் கடகம்:


ரிஷபம் ஐம்புலன்களில் நிலத்தையும் கடகம் நீரையும் குறிக்கின்றன. இது போலவே அவர்கள் தங்கள் குணங்களிலும் வேறுபடுவர். இருவரும் பிறர் நலனை பேணுவதில் குறியாக இருப்பர். நல்ல சாப்பாடு, நல்ல தருணம், ஊர் சுற்றுதல் ஆகிய விஷயங்கள் இருவருக்குமே பிடிக்குமாம். சில வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் அதிக அளவில் அன்பினை பரிமாறிக்கொள்வதால் காதல் நாளுக்கு நாள் இவர்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்குமாம். இருவரும் போட்டி போட்டு அன்பு காட்டுவதால் காதலுக்கு பஞ்சமே இருக்காது. 


மிதுனம் மற்றும் தனுசு:


மிதுன ராசிக்காரர்கள் ஐம்புலன்களில் காற்றின் இயல்பு உடையோராக இருப்பர். தனுசு ராசிக்காரர்கள் நெருப்பின் இயல்பு கொண்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு இடையில் பல விஷயங்கள் ஒத்துப்போகும். வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க பயப்படாத ராசிக்காரர்கள் இவர்கள். ஒன்றாக சாகசம் செய்வது ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்வது என பல விஷயங்களில் இருவரும் ஆழ்ந்து ஆராய்ந்து யோசித்து இறங்குவர். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்று வந்துவிட்டால் இருவருக்கும் நிகர் வேறு எந்த ராசிக்காரர்களும் கிடையாது. அதைத்தாண்டி இவர்களுக்கும் இனம் புரியா பந்தம், பார்த்தவுடன் பற்றிக்கொண்டு விடும். 


கன்னி மற்றும் மீனம்:


கன்னி மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு வாழ்வை ஒரு கட்டமைப்பில்தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தங்களுக்கென்று ஒரு வரையரை போட்டுக்கொண்டு அதை சரியாக கடைப்பிடிப்பர். அது 8 மணி நேரம் தூங்குவதாக இருக்கட்டும், சரியாக வேளைக்கு சாப்பிடுவதாக இருக்கட்டும் அல்லது சரியாக எல்லா விஷயங்களையும் ஆராய்வதாக இருக்கட்டும். இதை அனைத்தையும் இவர்கள் சரியாக ஃபாலோ செய்வர். இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல அரணாக இருப்பர். எந்த நேரத்திலும் யாராலும் தங்கள் அன்புக்குரியோருக்கு எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக் கொள்வர். 


சிம்மம் மற்றும் விருச்சிகம்:


சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுர் சுர்ரென கோபம் வந்து விடும். ஒருவர் அர்த்தமே இல்லாமல் கோபப்பட்டால் இன்னொருவர் அதை பேசி புரிய வைக்க முயற்சிப்பார். இருவரும் வெளியில் மிகவும் கரடு முரடான நபர்கள் போல காட்டிக்கொண்டாலும் கல்லுக்குள் ஈரம் என்பது போல இருவருக்குள்ளும் காதல் ஒளிந்து கிடக்கும். விருச்சிகம் தீ என்றால் சிம்மம் நீராக இருந்து அவரை அணைப்பார். இப்படி வாழ்வில் ஏற்படும் எல்லா தருணங்களையும் ஒன்றாக கையாண்டு காதலை வளர்க்கும் ஜோடி இவர்கள். 


மேலும் படிக்க | ஜோடி ராசி பலன்: ‘இந்த’ 5 ராசிகளுக்கு ‘அந்த’ 5 ராசிகள்தான் செட் ஆகுமாம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ