இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: புத-ஆதித்ய யோகத்தால் பம்பர் அதிர்ஷ்டம்
வேத ஜோதிட சாஸ்திரப்படி புதன் தனுசு ராசியில் டிசம்பர் 10 ஆம் தேதி பிரவேசித்துள்ளார். டிசம்பர் 16 ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியனும் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.
அவ்வப்போது கிரகங்களில் நடக்கும் மாற்றங்களும், அவற்றின் இடம் பெயர்தலும், நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதன் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வழியிலும் சிலருக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் அமைகின்றன.
அப்படி ஒரு மாற்றம் தற்போதும் நடந்துள்ளது. வேத ஜோதிட சாஸ்திரப்படி புதன் தனுசு ராசியில் டிசம்பர் 10 ஆம் தேதி பிரவேசித்துள்ளார். டிசம்பர் 16 ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியனும் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியனும் புதனும் இணைந்து வருவதால் புத-ஆதித்ய யோகம் உண்டாகும்.
ஜோதிடத்தில் புத-ஆதித்ய யோகம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த புத ஆதித்ய யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கப் போகிறது. எந்தெந்த ராசியில் (Zodiac Signs) சூரியன்-புதனின் அதிகப்படியான அதிர்ஷ்டம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
புத ஆதித்ய யோகத்தால் ராசிகள் மீது வரும் தாக்கம்:
மேஷம் (Aries): மேஷ (Aries) ராசிக்காரர்களுக்கு புத-ஆதித்ய யோகம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் கிட்டத்தட்ட அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பொருளாதார பலன்கள் உண்டாகும். பணியிடத்தில் செய்யும் பணி பாராட்டப்படும். மேலும் குடும்பத்தின் பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும்.
ALSO READ | 2022-ம் ஆண்டில் ராகு-கேதுவால் இந்த ராசிக்கு கேடு ஏற்பட வாய்ப்பு
மிதுனம் (Gemini): புத ஆதித்ய யோகம் மிதுன ராசிக்கார்ரகளு மிக நல்ல பலன்களைத் தரும். முதலீடு அல்லது கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் ஆனந்தமான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வாய்ப்புகள் பிறக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம் (Cancer): கடக ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம் சாதகமாக அமையும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய வருமானம் உருவாகும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல முறையில் நேரத்தை செலவிடுவீர்கள். கல்வியில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் பணி பாராட்டப்படும். வியாபாரத்திலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம் (Leo): சிம்ம (Leo) ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம் அனுகூலமாக அமையப் போகிறது. பொருளாதார நிலை மேம்படும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வேலை மாற்றம் ஏற்படும். அது பல வெற்றிகளைக் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | இந்த 2 ராசிக்காரர்கள் இன்று எதிலும் கவனம்; நிதானமாக செயல்பட வேண்டும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR