காதல்-திருமணம் என்ற ஒரு பெரிய கமிட்மெண்டிற்கு மனமும் குணமும் ஒத்துப்போனால் மட்டும் பத்தாது. அதற்கு சில ராசி பொருத்தங்களும் வேண்டும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு சில ராசிகளுக்கு குறிப்பிட்ட ராசிக்காரர்களுடன் மட்டும்தான் ஒத்துப்போகுமாம். அவர்களுடன் ஜோடி சேர்ந்தால் அவர்களின் வாழ்வும் நன்றாகவே இருக்குமாம். யார் யாருக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் ஜோடியாக போகிறார்கள் என பார்ப்போமா..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோடி ராசிப்பலன்..


எல்லோரும் ஒருவருக்கொருவர் பழகுவதில்லை. நீங்கள் சில நபர்களுடன் சிறந்த நண்பர்களாக இருக்கலாம், மற்றவர்கள் எப்போதும் அறிமுகமானவர்களாக மட்டுமே இருக்கலாம். ஆனால் அப்படி நீங்கள் புரிந்து கொண்ட ஒரு உன்னதமான இணைப்பை உணர்ந்திருக்க மாட்டீர்கள், ஆனால் சிறந்த ராசி ஜோடிகளை அறிந்துகொள்வது ஒருவருக்கொருவர் உங்கள் இணக்கத்தை தீர்மானிக்க உதவும். பஞ்சும் நெருப்பும் போல சில ராசிகள் அதிகம் முயற்சி செய்யாமல் சேர்ந்து கொள்கின்றன. அப்படி ஜோடி சேரும் ராசிக்காரர்களும் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். 


மேலும் படிக்க | ‘இந்த’ ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டுமாம்..! அந்த அதிர்ஷ்டக்கார ராசி யாருக்கு இருக்கு..?


1.கும்பம் மற்றும் மிதுனம்:


கும்பம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் இருவருமே ஐம்புலன்களில் ஒன்றான காற்றுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. இவர்களுக்குள் இருக்கும் குழந்தை தன்மை, நகைச்சுவை திறன் என அனைத்தும் இருவரையும் ஒரே ட்ராக்கில் பயணிக்க வைக்குமாம். வெவ்வேறு வகையிலான பிடித்தம் இருந்தாலும் அதை பேசி இருவரும் புரிந்து கொள்வதிலும் வல்லவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறாது. எங்கு பயணித்தாலும் இவர்கள் இருவரும் கடைசியில் ஒரே பாதையில்தான் செய்வார்களாம். காதல்-நட்பு என எல்லா உறவிவிலும் வலுப்பெற்று விளங்குபவர்கள் இவர்கள். 


2.சிம்மம் மற்றும் தனுசு:


சிம்மம் மற்றும் தனுசு ராசி கொண்டவர்கள், ஐம்புலன்களில் நெருப்புடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. தினம் தினம் இவர்கள் தங்கள் வாழ்வில் ரிஸ்க் எடுக்காமல் இருக்க மாட்டார்களாம். நட்புடனும் மரியாதையுடனும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்களாம். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து நடந்து கொள்ளும் தன்மையும் இவர்களிடம் இருக்கும். இருவருக்குள்ளும் எப்போதும் நல்ல எண்ணங்கள் மேலோங்கி இருப்பதனால் தீயவை இவர்கள் ரிலேஷன்ஷிப்பில் நெருங்காதாம்,


3. கன்னி மற்றும் ரிஷபம்:


கன்னி மற்றும் ரிஷப ராசி ஆகியவை நிலத்துடன் தொடர்புடையவை. காதல் உறவில் லேட்டாக அடியெடுத்து வைத்தாலும் லேட்டஸ்டாக அடியெடுத்து வைப்பவர்கள் இவர்கள். இவர்கள் இருவருக்குள்ளும் காதலை புரிந்து கொள்ள கொஞ்சம் நாட்கள் எடுக்கு. ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால், இவர்களைப்போல யாராலும் ஒற்றுமையான ஜோடியாக இருக்க முடியாது இருவரும் வீட்டு வேலையில் இருந்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு செய்வார்களாம். பாசம், அன்பு, அக்கறை என இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி காதல் மழையில் நனைத்து கொள்வார்களாம், 


4.கடகம் மற்றும் மீனம்:


இந்த இரண்டு ராசிகளுமே நீருடன் தொடர்புடையவையாக கருதப்படுகிறது. பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும். இருவரும் எல்லா நிலையிலும் இருவரையும் பரஸ்பரம் புரிந்து கொள்வர். இருவரும் வெளியூர் சுற்ற விரும்புவர். அதிக நபர்களை சந்திக்கவும் விரும்புவர். அதனால் இவர்களுக்குள் இணக்கம் அதிகரிக்கு. இருவரும் அதிகமாக தாங்கள் உணரும் விஷயங்களை பகிர்ந்து கொள்வர். அதனால், சண்டை வந்தாலும் சீக்கிரமாக சமாதானம் ஆகி விடுவர். 


5. மேஷம் மற்றும் தனுசு:


இருக்கும் ராசி பலன்களிலேயே மிகவும் கவரக்கூடிய ஜோடி இவர்கள்தான். இவரகளை பார்த்தவுடன் சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டவர்கள் என்பது அப்பட்டமாக தெரிந்துவிடும். இருவருக்கும் பல விஷயங்களில் ஒத்துப்போகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது, புரிந்து நடந்து கொள்வது, தவறு செய்தால் சுட்டிக்காட்டுவது என பல விஷயங்களில் ஒத்துபோவர். இதனால், இருவருக்கும் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கும்.


மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்கள் சிறந்த கணவர்களாக இருப்பார்களாம்..! யார் அந்த தங்கமான ராசி உடையோர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ