இன்று திருவாதிரை: நடராஜரை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாள்
மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம்.
மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம்.
திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது என்கிறார் யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலர். அன்று சிறிதளவு களி மட்டும் சாப்பிடலாம். மற்றபடி உணவேதும் உட்கொள்வது கூடாது. அதிகாலை எழுந்து, நீராடி, உங்கள் ஊரிலுள்ள சிவாலயத்தில் உள்ள நடராஜர் (Natarajar) சந்நிதியில் நடைபெறும் திருவாதிரை அபிஷேகத்தை கண்டு களிக்கலாம். திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை (Thiruvathira) நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும்.
ALSO READ | திருவாதிரைக்களி எப்படி செய்வது!!
மார்கழி (Margazhi) மாதத்து பவுர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் ‘திருவாதிரை’ விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை ஆருத்ரா தரிசனம் (Arudhra Darisanam) என்று அழைக்கின்றனர். ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது. அதோடு திரு என்ற அடைமொழியை பெற்று திருவாதிரை என்றானது. சிவபெருமானுக்கு (Shiva) உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும். இந்நட்சத்திர நாளில் சிதம்பரம் (Chidambaram) நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரையில் சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்படும். அபிஷேகத்தின்போது களி செய்து படைத்து வணங்குகிறோம். ஆருத்ரா தரிசனம் அன்று சிவபெருமானை வணங்கி வழிபடுபவர்களுக்கு எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும்.
ALSO READ | பிரதோஷ விரதம் 2020: சிவனை வழிபடுவதற்கான முழுமையான முறை.......
ஆருத்ரா தரிசனம் அன்று சிவபெருமானை வணங்கி வழிபடுபவர்களுக்கு எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். ஆணவம் அழிந்து அன்பு உண்டாகும். இறைவனிடம் கொள்ளும் பக்தி முக்தி அளிக்கும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR