சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வட சென்னை பகுதியில் இருக்கும் திருவொற்றியூர்‌ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில்‌ இருக்கும் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. வேதபாராயணம், காவலர், உதவி சுயம்பாகம், உதவி பரிச்சாரகம், சமையலர், சமையல் உதவியாளர் மற்றும் துப்புரவாளர், ஓட்டுநர், தபேதார், உதவி மின் பணியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19-12-2022 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப்பணி; திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில்


பணியின் பெயர்: வேதபாராயணம், காவலர், ஓட்டுநர், தபேதார், உதவி மின் பணியாளர், சமையல் உதவியாளர், துப்புரவாளர், உதவி சுயம்பாகம், உதவி பரிச்சாரகம் மற்றும் சமையலர்.  


பணியிடங்கள் எண்ணிக்கை; 12


விண்ணப்பிக்க கடைசி தேதி; 19-12-2022


விண்ணப்பிக்கும் முறை; Offline


காலிப் பணியிட விவரம்; 


வேதபாராயணம் – 1 
ஓட்டுநர் – 1 
தபேதார் – 1 
உதவி மின் பணியாளர் – 1 
காவலர் – 2 
உதவி சுயம்பாகம் – 2 
உதவி பரிச்சாரகம் – 1 
சமையலர் – 1 
சமையல் உதவியாளர் – 1 
துப்புரவாளர் – 1 


வயது வரம்பு:


தியாகராஜசுவாமி திருக்கோயில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 01-07-2022 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | Bank Holidays: அலர்ட் மக்களே..டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை


கல்வி தகுதி:


வேதபாராயணம் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. சமயநிறுவனம் அல்லது அரசு நிறுவனங்களால்‌ நடத்தப்படும்‌ ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில்‌ ‘தொடர்புடைய துறையில்‌ குறைந்தபட்சம்‌ மூன்றாண்டு படிப்பினை படித்ததற்கான சான்றிதழைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌.


ஓட்டுநர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.


தபேதார் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


உதவி மின் பணியாளர் – அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால்‌ வழங்கப்பட்ட மின்‌/ மின்கம்பியாளர்‌ பாடப்பிரிவில்‌ (Electrical / Wireman Trade) தொழில் பயிற்சி நிறுவனச்சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்.


காவலர் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.


உதவி சுயம்பாகம் & பரிச்சாரகம் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. கோயில்களின்‌ பழக்க வழக்கங்களுக்‌கேற்ப நெய்வேத்தியம்‌ மற்றும்‌ பிரசாதம்‌ தயாரிக்க‌ தெரிந்திருக்க வேண்டும்‌.


சமையலர் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில்‌ 3 ஆண்டுகள்‌ அணுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.


சமையல் உதவியாளர் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.
துப்புரவாளர் – தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.



ஊதிய விவரம்:


வேதபாராயணம் – ரூ.15,700 – 50,000/-
காவலர் – ரூ.15,900 – 50,400/-
உதவி சுயம்பாகம் – ரூ.10,000 – 31,500/-
உதவி பரிச்சாரகம் – ரூ.10,000 – 31,500/-
சமையலர் – ரூ.10,000 – 31,500/-
சமையல் உதவியாளர் – ரூ.6,900 – 21,500/-
துப்புரவாளர் – ரூ.4,200 – 12,900/-
ஓட்டுநர் – ரூ.18,500 – 58,600/-
தபேதார் – ரூ.15,900 – 50,400/-
உதவி மின் பணியாளர் – ரூ.16,600 – 52,400/-


விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 19-12-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்ப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | ஆவின் நிறுவனத்தில் ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் வேலை! தேர்வு கிடையாது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ