பொதுவாக, எந்தவொரு மின்சார விளக்கை வாங்கும் போது, நிறுவனங்கள் ஒரு வருடம் அல்லது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை உத்தரவாதம் அளிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் நாம் இரண்டு-மூன்று ஆண்டுகளாக ஒரு விளக்கை தொடர்ந்து ஒளிர்விப்பது மிகவும் அரிதானது, ஆனால் 118 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் ஒரு விளக்கை பற்று உங்களுக்கு தெரியுமா?. இந்த விளக்கு பயன்படுத்த துவங்கியில் இருந்து இன்று வரை பிரச்சினைகள் ஏதும் இன்றி இன்று வரை செம்மையாக ஒளிர்ந்து வருகிறது.


இந்த தனித்துவமான விளக்கை Centennial என்று அழைக்கின்றனர். கலிபோர்னியாவின் லிவர்மோர் நகரின் துப்பாக்கி அலுவலகத்தில் நிறுவப்பட்ட இந்த விளக்கை ஷெல்பி எலக்ட்ரானிக் நிறுவனம் உறுவாக்கியது. இது 1901-ஆம் ஆண்டில் முதன்முதலில் எரிந்தது. அப்போதிருந்து, இந்த விளக்கை தொடர்ந்து ஒளிர்வித்து வருகின்றனர் இந்த நிறுவனத்தினர். 


ஊடக அறிக்கையின்படி, இந்த விளக்கை 1937-ஆம் ஆண்டில் மின்சார கம்பியை மாற்றுவதற்காக முதன் முதலில் அணைத்துள்ளனர். பின்னர் மிச்சார கம்பியை மாற்றிய பின் மீண்டும் இயக்கியுள்ளனர். இந்த விளக்கின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விளக்கை CCTV கேமரா மூலம் கண்கானித்து வருகின்றனர்.


இதனையடுத்து இந்த விளக்கு 2013-ஆம் ஆண்டில் தானாகவே அணைத்தது, விளக்கு பழுது காரணமாக அணைந்திருக்கலாம் என நினைத்து பரிசோதித்த போது, அலுவலகத்தின் மின்சார இணைப்பு காரணமாக அணைந்தது தெரியவந்தது. பின்னர் கம்பி சரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. 
இந்த விளக்கு நாள் முழுவதும் 24 மணி நேரம் எரிந்து கொண்டே இருக்கிறது. 2001-ஆம் ஆண்டில், இந்த விளக்கின் 100-வது பிறந்தநாள் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது, இந்த நிகழ்வில் ஒரு இசை விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.