Home Loan; SBI விட குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கி!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை விட குறைவான வட்டியில் மகாராஷ்டிரா வங்கி வீட்டுக் கடன் வழங்குகிறது.
சொந்தமாக சிறிய வீடாவது கட்டிவிட வேண்டும் என்பது பலரின் கனவாகும். அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் ஸ்டேட் பேங்க் முதல் ஹெச்டிஎப்சி வரை பல வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குகின்றன. தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கினால் வட்டிவிகிதம் மிகவும் குறைவு.
எஸ்பிஐ வங்கி பொதுத்துறை நிறுவனங்களிலேயே மிகவும் குறைவான வட்டியில் வீட்டிக் கடன் வழங்குகிறது. அதனை இஎம்ஐ மூலம் மாதந்தோறும் தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம். வீட்டு லோன்களுக்கான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியின் ரெப்ரோ விகிதங்களை பொறுத்து வங்கிகள் முடிவு செய்யும்.
மேலும் படிக்க | Covid Side Effects: கோவிட் பாதிப்பு வீடுகளின் விலையையும் பாதிக்கும்
SBI vs மகாராஷ்டிரா வங்கி
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 6.70 சதவீத வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. அதேநேரத்தில், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஸ்டேட் பேங்கைவிட குறைவாக 6.40 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் ரெப்போ விகிதங்களை பொறுத்து வட்டி விகிதங்கள் மாறினாலும், இப்போதைய சூழலில் மிகவும் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகிறது மகாராஷ்டிரா வங்கி. இந்த வட்டி விகிதம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
SBI இஎம்ஐ
ஸ்டேட் பேங்கில் நீங்கள் 30 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை தவணை முறையில் செலுத்திக் கொள்ள முடியும். உங்களுக்கான வட்டி விகிதம் 6.70 (ஆண்டுக்கு) விழுக்காட்டில் வழங்கப்படும். மாதம்தோறும் 22,722 ரூபாய் தவணையாக செலுத்த வேண்டும். முடிவில் நீங்கள் வங்கியில் 54,53,240 ரூபாய் செலுத்தியிருப்பீர்கள்.
மகாராஷ்டிரா வங்கி இஎம்ஐ
மொத்த கடன் தொகை - 30 லட்சம்
கடன் காலம் - 20 ஆண்டுகள்
வங்கியின் வட்டி விகிதம் - ஆண்டுக்கு 6.4%
மாதத்திற்கு EMI-22,191
வங்கியால் வசூலிக்கப்படும் வட்டி-23,25,822
வங்கியில் நீங்கள் கொடுக்கும் மொத்தத் தொகை - 53,25,822
இதில் உங்களுக்கு உகந்த வங்கியில் வீட்டுக் கடனை பெற்றுக் கொள்ளுங்கள்
மேலும் படிக்க | Also Read | ஒரு தங்க நாணயத்தின் விலை 138 கோடி ரூபாயா? Too much!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR