மனித வேட்டை நடத்தி வந்த ‘அவ்னி’ என்கிற பெண் புலியை மகாராஷ்ட்ரா வனத்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மாலா மாவட்டத்திலுள்ள பந்தர்கடாவா பகுதியிலுள்ள டிபேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்தில் 9 புலிகள் வாழ்கின்றன. இந்த சரணாலயத்தில் உள்ளது தான் இந்த 5 வயது நிரம்பிய அவ்னி என்ற பெண் புலி. இந்த பெண் புலிக்கு பிறந்து 9 மாதங்களே ஆன 2 குட்டிகள் இருக்கிறது. 


இந்த நிலையில், கடந்த சில வருடங்களில் இந்த அவ்னி என்ற பெண் புலியால், கிட்டத்தட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. 


இதையடுத்து, பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அவ்னியை சுட்டுத்தள்ள மகாராஷ்டிரா மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.


இதன்படி வெள்ளிக்கிழமை இரவு யவத்மால் வனப்பகுதியில் வலம்வந்த வனத்துறையினர் அந்தப் புலியை சுட்டுக்கொன்றுள்ளனர். நாக்பூரில் உள்ள கோரேவாடா காப்பகத்தில் அந்தப் புலியின் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.