திருமணம் என்று சொன்னதும் எவ்வளவு உற்சாகம் வருகிறதோ அதேயளவு ஒருவிதமான கவலையும் மனதின் ஓரமாக வந்துவிடுகிறது, இதற்கு காரணம் திருமணத்திற்கு ஆகக்கூடிய செலவுகள் தான்.  இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர்.  அதிலும் பலர் மற்றொருவரை விட நாம் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைத்து போட்டிபோட்டு கொண்டு ஆடம்பரமாக திருமணத்தை செய்கின்றனர், இப்படி திருமணம் செய்வதால் நம்முடைய பாக்கெட் தான் காலியாகும்.  மற்ற நாடுகளை காட்டிலும் இந்திய திருமணங்கள் தான் உலகிலேயே மிகப் பெரியது, இங்கு ஒரு திருமணத்திற்கு சராசரியாக ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவாகிறது.  திருமணமும் சிறப்பாக செய்ய வேண்டும், அதே சமயம் பட்ஜெட்டில் துண்டு விழுகாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் சில ஐடியாக்களை பின்பற்ற வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிரியாணி வெறியில் இருக்கும் இந்தியா... நிமிஷத்துக்கு இத்தனையா - அதிகம் ஆர்டர் போட்ட உணவுகள் என்னென்ன?


திருமணம் செய்யப்போகும் எவரும் அந்த நிகழ்விற்காக நாம் எவ்வளவு செலவிட போகிறோம் என்பதை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.  உங்கள் திருமணத்தில் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை பட்டியலிடுங்கள், இவை அனைத்தும் உங்கள் பட்ஜெட்டிற்குள் அடங்குகிறதா என்பதை சரிபாருங்கள்.  ஆடம்பரமான விஷயங்கள் உங்கள் திருமணத்தில் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் பட்ஜெட்டும் அதற்கேற்ப காலியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொதுவாக மண்டபம், கேட்டரிங் போன்றவற்றிற்கு தான் அதிகமாக செலவாகிறது அதனால் விலையுயர்ந்த இடமாக இருக்கிறதா என்பதை பார்க்காமல் அது தரமாக இருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள்.



இந்திய திருமணங்களில் முக்கியமானது விருந்தினர்கள் கூட்டம் தான்.  குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என திருமண மண்டபமே விழாக்கோலமாக இருக்கும்.  திருமணத்திற்கு யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என பட்டியலிடுங்கள், அதிகப்படியான விருந்தினர்களை அழைத்தால் அதற்கேற்ப செலவும் அதிகமாக இருக்கும்.  அதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை பட்டியலிட்டு திருமணம் செய்வது உங்கள் பட்ஜெட்டை பாதுகாக்கும்.  திருமணத்தை தொடர்ந்து ஹனிமூன், இதற்காக பலரும் பல திட்டங்களை வைத்திருப்பார்கள்.  பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தாராளமாக செலவு செய்ய நினைத்தால் நீங்கள் எந்த தூர தேசத்தில் வேண்டுமானாலும் ஹனிமூனை கொண்டாடலாம்.  பட்ஜெட்டுக்குள் ஹனிமூன் செல்ல நினைத்தீர்கள் என்றால் பல உலக நாடுகளை சுற்றுவதை விட பாலி தீவு அல்லது தாய்லாந்து போன்ற இடங்களை தேர்ந்தெடுத்து சந்தோஷமாக ஹனிமூனை கொண்டாடுங்கள்.


மேலும் படிக்க | Ration Card: ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி, அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ