செல்ல நாயுடன் மாஸ் எண்ட்ரி கொடுத்த மணமகன்: வைரலாகும் வீடியோ

Groom Entry Viral Video: மணமகனின் வித்தியாசமான எண்ட்ரி வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது. தனது வளர்ப்பு நாய் மீது மணமகன் கொண்டுள்ள பாசம் இணைவாசிகளை கவர்ந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 5, 2022, 05:36 PM IST
  • இந்திய திருமணங்களில் வேடிக்கைகளும், கேளிக்கைகளும் நிறைந்திருக்கும்.
  • திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
செல்ல நாயுடன் மாஸ் எண்ட்ரி கொடுத்த மணமகன்: வைரலாகும் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. இந்திய திருமணங்களில் வேடிக்கைகளும், கேளிக்கைகளும் நிறைந்திருக்கும். சமீபத்திய திருமணங்களில் பல புதுமைகளை நாம் காண முடிகின்றது. மணமக்கள் தங்கள் திருமணம் டிரெண்ட் ஆக வேண்டும் என்று பல வித புதுமைகளை செய்கிறார்கள். 

திருமணத்தில் மணமக்களின் எண்ட்ரியில் பலவித புதுமையான வழிகளை நாம் தினம் தினம் காண்கிறோம். மணமக்கள் தங்கள் எண்ட்ரி பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இதன் மூலம் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் கவனத்தை மட்டுமின்றி, இணையவாசிகளின் கவனத்தையும் இவர்கள் ஈர்க்கிறார்கள். இந்திய திருமணங்களில், மாப்பிள்ளை குதிரையில் அமர்ந்து வரும் வழக்கம் உள்ளது. தற்போது வைரல் ஆகி வரும் வீடியோவில், மணமகன், தனது வளர்ப்பு நாயுடன் மணமண்டபத்துக்குள் நுழைகிறார். மணமகனின் இந்த வித்தியாசமன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | மகனுக்காக தந்தை செய்த செயல்: இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ 

மணமகன் தனது செல்ல நாயுடன் பைக்கில் அமர்ந்து திருமணத்தில் நுழைவதை வீடியோவில் காண முடிகின்றது. பைக்கில் நாயுடன் மணமகன் பிரம்மாண்டமாக எண்ட்ரி கொடுக்கும் வீடியோவை பயனர்கள் விரும்பி பார்க்கிறார்கள். இந்த செல்ல நாய் லாப்ரா இனத்தைச் சேர்ந்தது. திருமணத்திற்கான ​​இந்த நாய் அழகான ஆடைகளை அணிந்திருப்பதையும் காண முடிகின்றது. 

மணமகனின் மாஸ் எண்ட்ரியை இங்கே காணலாம்:

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவை இன்ஸ்டாகிராமில் supermebakarwadi என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதுவரை 19 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் மற்றும் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். வீடியோவில் இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 'இது நன்றாக இருக்கிறது, நாம் எப்போதும் நமது செல்லப்பிராணிகளை குடும்ப உறுப்பினர்களாக எண்ண வேண்டும்.” என்று எழுதியுள்ளார். மற்றொரு பயனர், ‘இந்த நாய் மிகவும் அழகாக இருக்கிறது' என்று எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | இது உனக்கு தேவையா...நபரை வெச்சி செஞ்ச பாம்பு: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News