இப்படி செய்தால் மாடித்தோட்டத்தை எளிய முறையில் பராமரிக்கலாம்!
![இப்படி செய்தால் மாடித்தோட்டத்தை எளிய முறையில் பராமரிக்கலாம்! இப்படி செய்தால் மாடித்தோட்டத்தை எளிய முறையில் பராமரிக்கலாம்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/03/26/217639-garde.jpg?itok=6h_ewfK8)
தாவரத்திற்கு மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்ப்பது நல்லது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நகரங்களில் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பலர் தோட்டத்தை அமைக்க போதுமான வசதி இல்லாததால் அவர்கள் குடியிருக்கும் வீட்டின் பால்கனியைப் பயன்படுத்துகின்றனர். அந்த வராண்டா எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி சிறியதாக இருந்தாலும் சரி, சிறிய பானைகளில் அவற்றை வளர்க்க முடியும். அதே சமயம் தாவரங்களை வளர்க்க நினைத்தால் மட்டும் போதாது, அதனை கவனித்துக்கொள்வதற்கு நேரத்தையும் அக்கறையையும் ஒதுக்க வேண்டும். சிறந்த முறையில் மாடித்தோட்டங்களை வளர்க்க இங்கே சில டிப்ஸ்கள் பின்வருமாறு.
மேலும் படிக்க | SIP Investment: கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமா? சுலபமான வழி கோடிஸ்வரரே!
1. சரியான திட்டமிடல் :
எந்தவொரு விஷயத்தையும் திட்டமிட்டு தான் தொடங்கவேண்டும், அதேபோல் சரியான திட்டமிடல் இல்லாமல் தோட்டத்தைத் தொடங்குவது மிகப்பெரிய தவறாக கருதப்படுகிறது. தரையில் உள்ள தோட்டத்தைப் போலவே, உங்கள் பால்கனி தோட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட உயிரோட்டம் இருக்கவேண்டும். முதலில் தோட்டத்திற்கான ப்ளூபிரிண்டை உருவாக்கவும். பானைகளை எங்கு வைப்பது , தரையில் எத்தனை பானைகளை வைக்கலாம், தொங்கும் பானைகளை எங்கு கட்டுவது, எந்த வகையான செடிகளை வைக்கலாம் என்று திட்டமிடுதல் அவசியமானது.
2. தவறான தாவரங்களை எடுப்பது :
தவறான தாவரங்களைத் தேர்ந்தெடுப்பது உங்கள் தோட்டத்தை அழிக்கக்கூடும். ஒவ்வொரு தாவரத்திற்கும் முறையே சூரிய ஒளி மற்றும் நீர் போன்ற தேவைகள் உள்ளன, மேலும் சில தாவரங்கள் பூக்கும் தன்மை கொண்டது அதனால் பால்கனியின் நிலைமைக்கு ஏற்ற சரியான தாவரங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
உதாரணமாக, அதிக ஈரப்பதம் உள்ள பகுதியில் வசிப்பவர்களாக இருந்தால் குளிர்ந்த நிலையில் எந்த தாவரம் வளருமா அதையே தேர்ந்தெடுக்க வேண்டும், மாறாக அதிக சூரிய ஒளி தேவைப்படும் தாவரங்களை தேர்ந்தெடுக்கக்கூடாது. மணி பிளான்ட், கற்றாழை, துளசி போன்ற தாவரங்களை வளர்ப்பதால் மாசுபாடு குறையும், சுத்தமான காற்று கிடைக்கும்.
3. அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தண்ணீர் :
தண்ணீரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தாவரங்களுக்கு பாய்ச்சுவது தவறான செயல். சில துளைகளின் மூலம் தாவரங்களுக்கு தண்ணீர் வருகிறது என்றல் நீங்கள் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்துங்கள், இல்லையேல் செடிகள் அழுகிவிடும். அதேசமயம் தாவரங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அவை காய்ந்து இறந்துவிடும். கோடை காலங்களில் பெரும்பாலான தாவரங்களுக்கு காலை மற்றும் மாலை என இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
4. தவறான பானைகளைத் தேர்ந்தெடுப்பது :
பானைகளை வாங்கும் போது சரியான வடிகால் மற்றும் சரியான அளவு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். சிறந்த வடிகால் தான் சிறந்த பால்கனி தோட்டத்தை உருவாக்கும். பானைக்கு அடியில் தேங்கி நிற்கும் அதிகப்படியான நீரால் செடிகள் அழுகிவிடும். நீங்கள் வைக்கப்போகும் செடி எவ்வளவு உயரம் வளரும் என்பதை பொறுத்து பானைகளை தேர்வு செய்ய வேண்டும்.
5. உரங்களைத் தவிர்த்தல் :
ஒரு தாவரம் வளர தண்ணீர் மற்றும் சூரிய ஒளி இன்றியமையாதது தான், இருப்பினும் உங்கள் பால்கனி தோட்டத்திற்கு இவை மட்டுமே போதாது, கூடுதல் ஊட்டச்சத்துக்கள் தேவை. அதனால் உரங்களை பயன்படுத்த வேண்டும். தாவரங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு கைப்பிடி உரத்தை மண்ணில் கலக்கவும்.
6. பூச்சிகள்/களைகளை கவனிக்காமல் இருப்பது :
தொடர்ந்து செடிகளை கவனித்துக் கொள்ள வேண்டும், அதிலுள்ள களைகள் மற்றும் இறந்த இலைகளை தவறாமல் அகற்ற வேண்டும். களைகளை உடனடியாக அகற்றாவிட்டால் அது தாவரத்தின் ஊட்டச்சத்துக்களை பறித்துவிடும். களைகளை வேரோடு பிடுங்கிவிட வேண்டும், மேலும் பூச்சிகள் மற்றும் கம்பளிப்பூச்சிகளின் தாக்குதலுக்கு தாவரங்கள் உள்ளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | இந்த பிரச்சனைகளுக்கு தேங்காய் நீர் தான் தீர்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR