பொதுவாக பணக்காரர்கள் தான் விமானத்தில் பயணம் செய்ய முடியும் என்ற காலம் மலை ஏறி விட்டது. ஆனால் இப்போது நடுத்தர மக்களும் அதிகம் பயணிக்க தொடங்கி விட்டனர். இருப்பினும், ரயில் டிக்கெட்டுகளை விட விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்நிலையில், விமான டிக்கெட்டுகளை மலிவான கட்டணத்தில் முன்பதிவு செய்வதற்கான சில வழிகளை அறிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமான டிக்கெட்டுகளை புக் செய்யும் போது சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டால், குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளைப் பெறலாம். மலிவான கட்டணத்தில், விமானங்களை முன்பதிவு செய்ய உங்களுக்கு உதவும் வகையிலான சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.


விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய சிறந்த நேரம்


விமானத்தை முன்பதிவு செய்ய சிறந்த நேரம் பயண தேதிக்கு சுமார் 28 நாட்களுக்கு முன்பு என்பதை அறிந்து கொள்ளவும். இதன் மூலம் கடைசி நிமிடத்தில் முன்பதிவு செய்வதை விட மிகவும் மலிவான கட்டணத்தில் டிக்கெட்டைப் பெறலாம். அடிக்கடி பயணம் (Travel Tips) மேற்கொள்பவர்கள் இந்த விஷயத்தை கவனித்துக் கொண்டால், நிறைய பணத்தை சேமிக்கலாம்.


மலிவான டிக்கெட்டுகளுக்கு இந்த நாட்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்


திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களை பயண நாளாக தேர்ந்தெடுத்தால், மலிவான விமான டிக்கெட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். மற்ற நாட்களை விட இந்த நாட்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட் விலைகள் குறைவாக இருக்கும். வெள்ளி, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும்.


விமான டிக்கெட்டுகள்  இந்த மாதங்களில் விலை அதிகமாக இருக்கும்


ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விமான டிக்கெட்டுகள் கட்டணம் அதிகம் இருக்கும். பண்டிகை காலங்களில் டிக்கெட்டுகள் விலை அதிகமாக இருக்கும். மேலே குறிப்பிட்டுள்ள மாதங்களில் புத்தாண்டு, பொங்கல், ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருகின்றன. இதன் காரணமாக விமான டிக்கெட்டுகள் விலை அதிகமாக இருக்கும். எளிமையான விஷயம் என்னவென்றால், தேவை அதிகரித்தால், விலையும் அதிகரிக்கும். எனவே, இந்த மாதங்களில் நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தால், முதலில் டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள். இல்லையெனில் அதிக கட்டணத்தில் டிக்கெட் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், திட்டமிட்டு முன்பதிவு செய்வதன் உங்கள் பணத்தை பெரிய அளவில் சேமிக்கலாம்.


டிக்கெட் முன்பதிவை சில மாதங்கள் முன்கூட்டியே செய்யவதை தவிர்க்க வேண்டும்


முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது மலிவான கட்டணத்தில் டிக்கெட்டுகளைப் பெற உதவுகிறது என்பதை மறுக்க இயலாது. ஆனால் டிக்கெட்டுகளை சில மாதங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்தால், அதாவது புறப்படும் தேதிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, என்ற அளவில் முன்பதிவு செய்தால், லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஏனெனில், அதிக கட்டணத்தில் விமானம் டிக்கெட்டுகளை வாங்க நேரிடலாம். அதே சமயத்தில் கடைசி நேரத்தில் டிக்கெட் விலை இரட்டிப்பாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதே போல, பண்டிகை காலத்தின் போதும் அல்லது விசேஷ சமயங்களிலும் விமான டிக்கெட்டுகள் விலை உச்சத்திற்கு சென்று விடும். எனவே நீங்கள் மலிவான விமானத்தை விரும்பினால், இந்த நேரத்தில் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்.


மேலும் படிக்க | டிசம்பரில் சுற்றுலா போக டக்கரான 8 இடங்கள்... இப்போவே பிளான் போடுங்க!


டிக்கெட் விலையை அவ்வப்போது கண்காணித்து அறிந்து கொள்ளவும்


விமான கட்டணத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், விலை குறித்த அலர்ட்களை பெற உதவும் 'கட்டண ஒப்பீட்டு' செயலிகளை அல்லது தளங்களை  பயன்படுத்தலாம். இது தவிர, உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தால், டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது அதைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், இதன் மூலம் கிரெடிட் கார்டு வெகுமதி புள்ளிகளைப் பெறலாம். இந்த புள்ளிகளின் உதவியுடன், நீங்கள் டிக்கெட் விலையில் நல்ல தள்ளுபடியைப் பெறலாம்.


சர்வதேச டிக்கெட்டுகளை எப்போது முன்பதிவு செய்வது?


நீங்கள் பயணம் அல்லது சில காரணகளுக்காக விமானத்தில் வேறு நாட்டிற்குச் செல்லப் போகிறீர்கள் என்றால், நீங்கள் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். இது மலிவான டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | டூர் போனா செலவாகும்னு பயமா... சிக்கனமா டிராவல் பண்ண இந்த டிப்ஸ்களை படிங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ