உங்களை திட்டுபவர்களின் வாயை மூட வைக்க..‘இதை’ செய்யுங்கள்!
உங்களை யாரேனும் திட்டிக்கொண்டே இருக்கின்றனரா? அவர்களின் வாயை மூட வைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
நாம் என்ன செய்தால், என்ன சொன்னாலும் அதை குறை கூறுவதற்கோ ஒரு நபர் நம்முடன் இருந்து கொண்டே இருப்பார். இவர்களுக்கு நம்மை திட்டுவதற்கு காரணம் எல்லாம் தேவையில்லை. நாம் இருப்பதே, அவர்கள் திட்டுவதற்கு பெரிய காரணமாக இருக்கும். இப்படிப்பட்ட நபர்கள், வாழ்வை பற்றியும் பிறரை பற்றியும் புரிதல் அற்றவர்களாக இருப்பார்கள். ஆனால், எல்லா நாட்களும் இவர்களின் திட்டை இப்படி கேட்டுக்கொண்டே இருக்க முடியுமா? அவர்கள் அடுத்த முறை உங்களை கறித்து கொட்டும் போது வாயை மூட வைக்க, நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும். அது என்ன தெரியுமா?
அமைதியாக இருங்கள்:
உங்கள் அமைதிக்கு மிகப்பெறிய பவர் இருக்கிறது. அவர்கள் உங்களை திட்டும் போது, கோபமாக எதுவும் ரியாக்ட் செய்யாமல், பொறுமையை கடைபிடியுங்கள். ஒருவர் கத்திக்கொண்டிருக்கும் போது, இன்னொருவர் அமைதியாக இருந்தால் அவர் ஒரு கட்டத்தில் தானாக அடங்கி விடுவார். அந்த சூழல் கொஞ்சம் தனிந்த பிறகு அவரிடம் சென்று அது குறித்து பேசலாம்.
குரலின் தொனி:
பெரும்பாலானோர், கோபமாக இருக்கும் போது தங்களின் குரலை உயர்த்தி பேசுவர். இதனால், அவர்கள் பேசுவது நியாயமாகி விடும் என நினைத்துக்கொள்வர். ஆனால், யார் ஒருவர் பேசும் போது குரலை உயர்த்தாமல், அமைதியாக தனக்கு பாசிடிவாக இருக்கும் பாய்ண்ட்களை பேசுகிறாரோ அவரே வெற்றியாளர்.
நகைச்சுவை:
கடுகடுவென இருக்கும் அந்த சூழலை தணிக்க, ஏதேனும் சிறிதாக நகைச்சுவை செய்யலாம்.
பிரேக்:
சண்டை கையை மீறி போகும் போது, “இது குறித்து சிறிது நேரம் கழித்து பேசலாமா..?” என்று கேளுங்கள். “இப்போது இருவருமே கோபமாக இருக்கிறோம். என்ன பேசினாலும் தவறாக சென்று முடிந்து விடும். கொஞ்ச நேரம் கழித்து இது குறித்து பேசலாம்” என்று உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.
உடல் மொழி:
நீங்கள் நினைப்பதை வெளிப்படுத்த உடல்மொழி என்பது மிகவும் முக்கியமாகும். அவர்கள் கத்திக்கொண்டிருக்கும் போது, நீங்கள் தலையசைப்பது, நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு பேசாமல் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க | பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? ‘இந்த’ 8 பிரச்சனை தலை விரித்தாடும்!
உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்:
உங்களை எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பவர் உங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஒருவராக இருப்பார். அவர்கள் பெற்றோர், தோழி, மனைவி, கணவன் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் உங்களை இப்படி வார்த்தைகளால் சுட்டெரிப்பது உங்களை காயப்படுத்துகிறது என்பதை நீங்கள் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். மனதிலிருந்து உண்மையாக பேசினால் கண்டிப்பாக அவர்களிடம் இருந்து சின்ன மாற்றமாவது வரும்.
உங்கள் தேவைகளை தெரிவிக்கவும்:
உங்களை அன்புக்கும் பாசத்திற்கும் தகுதியுடையவராக உணர்ச்சி பெற வைக்கும் விஷயங்களை லிஸ்ட் போடுங்கள். அதில், எதெல்லாம் நீங்கள் பிறரிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்ற விஷயங்களையும் எழுத வேண்டும். இது, நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை பூர்த்தி செய்ய உதவலாம்.
ஆதரவு:
உங்களை பேசிப்பேசியே காலி செய்யும் நபரை தவிர, வேறு யாரேனும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க முடியுமா என்பதை யோசித்து பாருங்கள். நண்பர்கள், உடன் பிறந்தவர்கள், மன நல ஆலோசகர் என பலர் இதற்கு உதவி புரிவர். பிறரிடம் பேசுவதால் உங்களுக்கு மன அமைதி கிடைப்பதோடு, உங்கள் மனதில் இருப்பதை கேட்க ஒருவர் இருக்கிறார் என்ற ஆறுதலும் கிடைக்கும்.
மேலும் படிக்க | உங்களை வார்த்தையால் அட்டாக் செய்பவரை சைலண்டா வாயை மூட வைக்கலாம்! 5 வழிகள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ