Serious Problems That Will Arise If Women Do No Exist : மெரினா திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சி வரும். அதில், “பெண்கள் இல்லாத உலகம் எப்படியிருக்கும்?” என்று கேள்வி கேட்கும் நாயகன், மைண்ட் வாய்சில் “ரொம்ப நிம்மதியா இருக்கும்டி..” என்று யோசிப்பான். இது உண்மைதானா? பெண்கள் இல்லாத உலகில் ஆண்களால் மட்டும் நிம்மதியாய் இருந்து விட முடியுமா? பெண்கள் இல்லாத உலகில் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா? இங்கு அது குறித்து பார்ப்போம்.
மக்கள் தொகை குறையும்:
பெண் இருந்தால்தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். உலகில் பெண்கள் இல்லை என்றால், மக்கள் தொகை பெருக்கத்திற்கு வாய்ப்பே இருக்காது. இதனால், பல தலைமுறைகள் பிறக்காமலேயே போய்விடும்.
குடும்ப அமைப்பு சீர்குலையும்:
பல இல்லங்களில், ஒரு வீட்டின் தலைவன்-தலைவி இருந்தாலும் அந்த வீட்டின் பெண் மட்டுமே அனைத்தையும் கட்டிக்காக்கும் பொறுப்பாளராக இருக்கிறாள். இதுவே பெரும்பாலான குடும்பங்களில் நடந்து வருகிறது. குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க, நல்ல பாடம் கற்றுக்கொடுக்க பெண்கள் இல்லை என்றால், அந்த குடும்பத்தின் அமைப்பே சீர்குலைந்து விடும். இதனால், பல்வேறு பிரச்சனைகள் உலகம் சந்திக்கலாம்.
கலாச்சாரம்:
இப்போது வரை, உலகளவில் பல்வேறு கலாச்சாரங்களும், ஒழுக்கங்களும் பெண்களை மையமாக வைத்தே இருக்கிறது. இது மட்டுமல்ல, கலைத்துறையில் பெரிதாக சாதிப்பதும் பெண்களாகத்தான் இருக்க்கின்றனர். இவர்கள் இல்லை என்றால், அந்த துறை என்னாகும் என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி.
பொருளாதார வீழ்ச்சி:
பெண்கள், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இப்போது வேலை பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஒரு நாள், இவர்கள் யாருமே இல்லை என்றால் அப்போது ஏற்படும் பொருளாதார விழ்ச்சியை யாராலும் தவிர்க்க முடியாது.
மனநலப் பிரச்சினைகள்:
பல உறவுகளில், பெண்கள்தான் உணர்ச்சி ரீதியாக ஆதரவு கொடுப்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் இந்த உலகில் இல்லை என்றால் பலருக்கு தனிமையான உணர்வும், தனிமை படுத்தப்பட்டது போன்ற உணர்வும் அதிகரிக்கலாம். இதனால், மனநலம் சார்ந்த பிரச்சச்னைகள் அதிகரிக்கலாம்.
மருத்துவத்துறை:
மருத்துவத்துறையில், பெண்கள் சார்ந்த பிரச்சனைகளும், அது குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. பெண்கள், இந்த உலகில் இல்லை என்றால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகள் நின்று போகும். இதனால், மருத்துவ துறையின் ஒரு பாகமே அழியக்கூட வாய்ப்புள்ளதாம்.
மேலும் படிக்க | ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..!
சமுதாயத்தில் உறுதியற்ற தன்மை:
சமூகத்தில் அனைவரும் தொடர்பு கொள்ளும் முறையே மாறக்கூடும். சமூக தொடர்புகளின் இயக்கவியல் கடுமையாக மாறி, ஆக்கிரமிப்பு எண்ணம், போட்டி, பொறாமை ஆகியவை அதிகரிக்கலாம். இதனால், சமூக சீரமைப்பு சீர்குலைந்து சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்.
தலைமைத்துவத்தில் பன்முகத்தன்மை இழப்பு:
தலைமைத்துவத்தில், ஆண்களின் அணுகுமுறை ஒன்றாக இருக்கும், பெண்களின் அணுகுமுறை வேறாக இருக்கும். இது ஒரு அலுவலகத்தில் மட்டுமல்ல, அரசியல் கட்சியில், நாட்டை வழி நடத்துவதில் என அனைத்திலும் இருக்கிறது. பெண்கள் இல்லை என்றால் இந்த தலைமைத்துவ பண்பு கெட்டுப்போக வாய்ப்புள்ளது. பெண்கள் தலைவர்களாக இல்லாமல் இருப்பது, ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் இருந்து காண வழிவிடாமல் இருக்கும். இதனால், எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு கடைசி வரை சரியான தீர்வே கிடைக்காமல் போகலாம்.
மேலும் படிக்க | பெண்கள் அதிகமாக மது குடிக்கும் 7 இந்திய மாநிலங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ