ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால், பதற வேண்டாம்; இதை செய்யுங்க..!!
நம்மில் பலருக்கு எங்கு சென்றாலும் ஸ்மார்ட்போனை (Smartphone) கையுடன் எடுத்து செல்லும் வழக்கம் இருக்கிறது. அது நீச்சல் குளம் ஆனாலும், சரி, குளியல் அறையானாலும் சரி, நம்மை விட்டு நீங்காமல் அது இருக்கும் நிலை தான் உள்ளது.
நம்மில் பலருக்கு எங்கு சென்றாலும் ஸ்மார்ட்போனை (Smartphone) கையுடன் எடுத்து செல்லும் வழக்கம் இருக்கிறது. அது நீச்சல் குளம் ஆனாலும், சரி, குளியல் அறையானாலும் சரி, நம்மை விட்டு நீங்காமல் அது இருக்கும் நிலை தான் உள்ளது. அதன் காரணமாக ஸ்மார்போன் தண்ணீரில் விழும் வாய்ப்புகள் அதிகமாகிறது. தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனை காப்பாற்ற சரியான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாக சரிசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை (Smart Phone) தண்ணீரிலிருந்து எடுத்து, முதலில் சுவிட்ச் ஆப் (Switch Off ) செய்ய வேண்டும். பின்னர் அதனை துணியினால் துடைத்து, முடிந்த அளவிற்கு நன்றாக உதறி, அதிலிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். அதன்பின்பு குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், தண்ணீரில் விழுந்த பின் உங்கள் போன் ஆன் ஆகவே இருந்தால், அது பழுதடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அதே போன்று, ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்டி கார்டு (SD card), பேட்டரி (Battery), சிம் கார்டு (SIM Card) போன்றவற்றை அதிலிருந்து அகற்ற வேண்டும். .ஸ்மார்ட்போன் முழுமையாக காயாமல், சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் நிச்சயம் கூடாது, அப்படி அவசரப்பட்டு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் ஸ்மார்ட் போன் வெடிக்கும் அபாயம் உள்ளது.
ALSO READ | Jio vs Airtel vs Vi: ₹300-க்கும் குறைவான கட்டணத்தில் தினசரி 2GB டேட்டா
ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை அகற்ற அதனை வெயிலில் வைப்பது சிறந்த பலனை தரும் என கூறுகிறார்கள். மேலும், ஸ்மார்ட்போனை வெயிலில் வைத்தால், அதில் இருக்கும் தண்ணீர் சீக்கிரம் உலர்ந்து விடும்.
இரவு நேரமாக இருந்தால் மின்விளக்கு வெளிச்சத்தில் வைப்பதும் பலன் கொடுக்கும். ஸ்மார்ட்போனின் மேல் சிறிது நேரம் அரிசிக்குள் போட்டுவைத்தால் சரியாகும் என சிலர் கூறுகின்றனர்.
இந்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிய போதும் உங்கள் ஸ்மார்ட்போனை ஆன் செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் அதனை சர்வீஸ் சென்ட்டர் எடுத்து சென்று பழுது பார்ப்பது நல்லது.
ALSO READ | மொபைல் திரையை பாதுகாக்கும் Screen Guard உங்கள் மொபைலுக்கு சேதத்தையும் ஏற்படுத்தலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR