மொபைல் திரையை பாதுகாக்கும் Screen Guard உங்கள் மொபைலுக்கு சேதத்தையும் ஏற்படுத்தலாம்

தொலைபேசியை வாங்கும் போது, அந்த தொலைபேசி தயாரிக்கும் அதே நிறுவனத்திடமிருந்து ஒரு ஸ்க்ரீன் கார்ட் வாங்க முயற்சிக்கவும். ஏனென்றால், சென்சார் எங்கு நிறுவப்பட்டிருக்கிறது என்பது நிறுவனங்களுக்குத் தெரியும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2021, 11:51 AM IST
  • தங்கள் ஸ்மார்ட்போனைப் பாதுகாக்க ஸ்கிரீன் கார்டைப் (Screen Guard) பயன்படுத்தாதவர்களே இல்லை
  • தற்போதைய நவீன மொபைல்களில் உள்ள டிஸ்ப்ளே இரண்டு சென்சார்களைக் கொண்டுள்ளன.
  • இவை சுற்றுப்புற ஒளிக்கான சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்.
மொபைல் திரையை பாதுகாக்கும் Screen Guard உங்கள் மொபைலுக்கு சேதத்தையும் ஏற்படுத்தலாம் title=

 

மொபைல் போன் (Mobile Phone) ஸ்கீரினை காக்கும் ஸ்கிரீன் கார்ட் உங்கள் ஸ்மார்ட்போனை சேதப்படுத்தலாம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆனால், அது உண்மை.

தங்கள் ஸ்மார்ட்போனைப் பாதுகாக்க ஸ்கிரீன் கார்டைப் (Screen Guard) பயன்படுத்தாதவர்களே இல்லை. போன் திரையில், கீறல்கள் ஏதும் விழாமல் இருக்க, சுத்தமகா பரமரிக்க என அனைவருக்கும், மொபைல் வாங்கியவுடன் ஸ்க்ரீன் கார்ட் போடும் வழக்கம் உள்ளது ஆனால் ஸ்கீரினிற்கு பாதுகாப்பானது என்றாலும், அது எவ்வளவு ஆபத்தானது என்று உங்களுக்குத் தெரியுமா?  கம்பெனி வழங்கும் ஸ்க்ரீன் கார்ட் அல்லாத மூன்றாம் தரப்பினரின், ஸ்கிரீன் ப்ரொடெக்டரை நீங்கள் பயன்படுத்தினால், அது மொபைல் போனுக்கு தீங்கு விளைவிக்கும்.  மொபைல் போன் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படக் கூடும்

ALSO READ | Passport: வீட்டில் இருந்த படியே நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணபிப்பது எப்படி?

தற்போதைய நவீன மொபைல்களில் உள்ள டிஸ்ப்ளே இரண்டு சென்சார்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுப்புற ஒளிக்கான சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்.  ஸ்க்ரீன் கார்ட் இந்த சென்சார்களை மறைத்தால்,  அவை செயல்பட முடியாமல் போவதன் காரணமாக, உங்கள் ஸ்மார்ட்போனில் அழைப்புகள் வரும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன. யாராவது உங்களை அழைக்கும் போதெல்லாம், அந்த அழைப்பு பல முறை இணைக்கப்படாமல் கட் ஆகி விடும். மேலும், இந்த காரணத்தினால், திரையில் தோன்றும், கைரேகை ஸ்கேனர் வேலை செய்யாமல் போகும் வாய்ப்பும் அதிகம்.

இதற்கான தீர்வு என்ன

நாம் தொலைபேசியை வாங்கும் போது, அந்த தொலைபேசி தயாரிக்கும் அதே நிறுவனத்திடமிருந்து ஒரு ஸ்க்ரீன் கார்ட் வாங்க முயற்சிக்கவும். ஏனென்றால், சென்சார் எங்கு நிறுவப்பட்டிருக்கிறது என்பது நிறுவனங்களுக்குத் தெரியும். இதை மனதில் வைத்து, வேறு இடங்கள் அல்லது மூன்றாம் தரப்பிலிருந்து ஸ்க்ரீன் கார்ட் வாங்கலாமல் நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்க்ரீன் கார்டையே வாங்கவும்.

ALSO READ |DigiLocker: DL, PAN, ஆதார், பாஸ்போர்ட், போன்றவை தொலையும் என்ற கவலை இல்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News