திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலின் உண்டியல் வருமானம் குறைந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதிலும் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.


இந்நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலின் உண்டியல் வருமானம் குறைந்துள்ளது. தினசரி 3 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைக்கும் நிலையில் நேற்று திடிரென்று 73 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயில் குடமுழுக்கு நிகழ்வுகள் காரணமாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதே காணிக்கை குறைந்ததற்கு காரணம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.