Tirumala Tirupati: விடுமுறை காலம் என்பதால் திருமலை திருப்பதியை காண ஏராளமான மக்கள் படையெடுத்து வருகின்றனர். இந்த சீசனில் திருமலையில் கூட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) விஐபி தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவை தொடர்பான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.  கோடை விடுமுறையில் டோக்கன் இன்றி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனத்துக்கு 30 முதல் 40 மணி நேரம் வரை காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருக்கும் சிக்கலை தீர்க்கவும், பொது பக்தர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுப்ரபாத சேவைக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட விருப்ப ஒதுக்கீட்டை நீக்க டிடிடி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.  இந்த மாற்றத்தின் மூலம் தரிசன செயல்பாட்டில் சுமார் 20 நிமிடங்கள் மிச்சமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரயிலில் பயணிக்க போறீங்களா? கட்டாயம் இந்த செய்தியை உடனே படியுங்கள்



வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று டிடிடி தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார்.  இதன் மூலம் பக்தர்கள் மூன்று மணி நேரம் முன்னதாகவே பெருமாளை தரிசிக்கலாம், இந்த மாற்றங்கள் ஜூன் 30 வரை அமலில் இருக்கும்.  விஐபி பிரேக் தரிசனங்கள் கோவிலுக்கு தனிப்பட்ட முறையில் வருகை தரும் விஐபிகளுக்கென்று பிரத்யேகமாக ஒதுக்கப்படுகிறது.  இந்த புதிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு பக்தர்கள் மற்றும் விஐபிகளுக்கு தலைவர் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மேலும், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் திருப்பாவடா சேவை இனி பக்தர்கள் வருகையின்றி நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க கடந்த ஒரு வாரமாக பக்தர்களின் கூட்டம் அதிக எண்ணிக்கையில் கூடி வருகிறது.  கடந்த வியாழக்கிழமையன்று, வைகுண்டம் வரிசை வளாகம் மற்றும் நாராயணகிரி கொட்டகையில் பகுதியில் எஸ்எஸ்டி டோக்கன் இல்லாமல் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.  ரிங் ரோட்டில் சீலாதோரணத்தை அடைந்து 2 கிலோமீட்டர் வரை வரிசை நீண்டு செல்லும் அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. 


கடந்த மே 17ம் தேதியன்று, சுமார் 79,207 பக்தர்கள் திருமலையில் உள்ள பிரதான கோவிலுக்கு வழிபாட்டுக்கு சென்றுள்ளனர், அன்றைய தினம் மட்டும் மொத்தமாக உண்டியலில் ரூ.3.19 கோடி காணிக்கை சேர்ந்துள்ளது. சர்வதர்ஷன் பிரிவின் கீழ் உள்ள பக்தர்கள் மூலஸ்தானத்தை தரிசனம் செய்ய 36 மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்று டிடிடி அதிகாரிகள் கூறியுள்ளனர்.  தரிசனத்திற்காக, பக்தர்களுக்கு தினசரி 18 முதல் 19 மணிநேரமும், விஐபிகளுக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் மீதமுள்ள 15 மணிநேரம் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  30 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பவர்களுக்கு உணவு பிரசாதம் வழங்கப்படும்.  காலை 7 மணிக்கு காலை உணவும், மதியம் 12 மணிக்கு மதிய உணவும் வழங்கப்படும்.  இதுதவிர இடையில் பாலும், மாலையில் சிற்றுண்டியும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.  மேலும் பக்தர்களை மகிழ்விப்பதற்காக ஆன்மீக நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும்.


மேலும் படிக்க | 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் கார்டு அவசியமா? முக்கிய தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ