மேஷத்தில் புதன் பெயர்ச்சி: வேத ஜோதிடத்தில், புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அந்த நபர் மிகவும் புத்திசாலியாகவும், பேசுவதில் திறமையானவராகவும், பெரிய தொழிலதிபராகவும் இருப்பார்கள். அதுமட்டுமின்றி பகுத்தறியும் திறனும், தொடர்பு கொள்ளும் பாணியும் அற்புதமாக இருக்கும் என்பார்கள். இந்த நேரத்தில் புதன் மேஷ ராசியில் இருந்து சரியான திசையில் செல்கிறார். இப்போது ஜூன் 7 ஆம் தேதி, புதன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதற்கு முன்னதாக மேஷ ராசியில் புதன் இருக்கும் நிலைஉஇல ஐந்து ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் பெரும் முன்னேற்றத்தை தரும். இனி வரும் 15 நாட்களில் எந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் உயர் பதவி, பணம், பதவி உயர்வு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கைக்கு அடுத்த 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை
மிதுன ராசி: ஜூன் 7 வரையிலான காலம் மிதுன ராசிக்காரர்களுக்கு வலுவான பொருளாதார பலன்களையும் பெரிய முன்னேற்றத்தையும் தரும். இந்த ராசிக்காரர்கள் பணத்தைப் பெறுவார்கள், அதேபோல் இந்த ராசிக்காரர்களால் சேமிக்கவும் முடியும். யாதேனும் பழைய ஆசை அல்லது கனவு இருந்தால் அவை நிறைவேறும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க | 28 நாட்களுக்குப் பிறகு இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, சனியின் அருள் கிடைக்கும்
கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி செய்வதால், ஜூன் 7 வரையிலான காலம் இந்த ராசிக்காரர்களின் தொழிலில் சாதகமான பலனைத் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மாற்றம் ஏற்படலாம். நீங்கள் பதவி உயர்வு பெறலாம். புதிய தொழில் தொடங்கலாம். நீங்கள் சில பெரிய சாதனைகளை அடைய முடியும். நீண்ட பயணம் மேற்கொள்ளலாம்.
சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெருமளவு பணத்தையும், வெற்றியையும் தருவார். பேச்சு சக்தியில் வேலை நடக்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். எந்த ஒரு முக்கியமான வேலையிலும் வெற்றி பெறலாம். ஆசை நிறைவேறும். நீங்கள் பயணத்திற்கு பணம் செலவழிப்பீர்கள்.
தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூன் 7 வரையிலான காலம் தனிப்பட்ட-தொழில் வாழ்க்கை மற்றும் நிதி விஷயங்களில் சுப பலன்களைத் தரும். பெரிய பலன்கள் இருக்கலாம். தேர்வு-போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தனியாக இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யலாம்.
கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் புதிய வாய்ப்புகளைத் தருவார். புதிய வேலையில் சேரலாம். தற்போதைய பணியில் பதவி உயர்வு, சம்பள உயர்வை பெறலாம். ஒரு பயணத் திட்டத்தை உருவாக்கலாம், அது உங்களுக்கு நன்மைகளைத் தரும். தந்தையுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும், மேலும் புதன் இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய ஆதரவளிப்பார்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ராகு கேதுவினால் வாழ்க்கையில் நெருக்கடிகளை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ