திருப்பதியில் லட்டுவின் விலையை உயர்த்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பதி கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழக்கப்பட்டு வருகிறது. இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10க்கு 2 லட்டுகளும், கூடுதலாக ரூ.25க்கு 1 லட்டு என வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.


இந்நிலையில் ஒரு லட்டை தயார் செய்ய தேவஸ்தானம் ரூ.37 செலவு செய்கிறது. மேலும் ஆண்டுக்கு ரூ.200 கோடி கூடுதல் செலவாகிறது எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. 


இந்நிலையில் இதை கட்டுபடுத்த லட்டு விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் லட்டு விலை எவ்வளவு உயர்த்துவது என ஆலோசித்து, அரசு அனுமதியுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக திருப்பதியில் லட்டு வாங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.