Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிறகு தொற்று பரவல் சற்று குறைந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான (Tirumala Tirupati Devasthanams) நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது. 


ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்


இதற்கிடையில் தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்துவருகிறது. 


அதேபோல, ஆந்திராவின் சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் நேற்றைக்கு முந்தைய தினம் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


இந்த நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் திருப்பதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் மழை, வெள்ளம் இழுத்துச் சென்றது. திருப்பதி நகரில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ளத்திற்கு காரணம் நகரை சுற்றி இருந்த ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதுதான் காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இதேபோல் சித்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக 20 கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகள் என்று வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. 


இந்நிலையில் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் திருமலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பதியில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் மழை நிற்கும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம். ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்த பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR