திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா; முழு விவரம் இங்கே

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பிரம்மோற்சவம் நடைபெறும்.
Tirumala Tirupati: திருப்பதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது ஆகும் . இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர். அதன்படி சமீப காலமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
தற்போது இந்த தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்றும், சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம் என்றும் கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு 300 ரூபாய் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு 5000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
இந்நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாயக திருப்பதி தேவஸ்தானம் தெறித்து இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து திருமலையில் அதிகாரிகளுடன் முதன்மை செயல் அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பின் பேசிய முதன்மை செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி கூறியதாவது., பிரம்மோற்சவ விழாவின் போது, 30 ஆயிரம் பக்தர்கள் வருகை தர உள்ளனர். முக்கிய சேவையான கருட சேவை அன்று காலை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு தரப்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு தடுப்பூசிகள் அல்லது 72 மணி நேரத்திற்கு உள்ள கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழ் எடுத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR