உலக பிரசித்திபெற்ற திருப்பதி கோவிலில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டிருக்கும் திருப்பதி தேவஸ்தானம், மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் மகளிர் தினத்தில் பெண் ஊழியர்களை கவுரவிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், பெண் ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் TTD நலத் துறையின் கீழ் பெண் ஊழியர்கள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க ரம்யானந்த பாரதி, ஸ்ரீ சக்தி பீடதீஸ்வரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேச்சாளர்கள் கௌதமி, CEO, எலக்ட்ரானிக் மேனுபேக்ச்சர் கிளஸ்டர் (EMC) ரேனிகுண்டா, சரிதா, CID SP ஆகியோரும் பங்கேற்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதேச ஹாக்கி வீராங்கனை ரஜனி, பலமனேரை சேர்ந்த தொழிலதிபர் ரத்னா ரெட்டி, தேசிய விருது பெற்ற இயற்கை விவசாயி ஓபுலம்மா ஆகியோருக்கு  இந்த நிகழ்வின்போது விருது வழங்கப்பட உள்ளது.


மேலும் படிக்க | சதயத்தில் சனி பகவான்! வரும் 7 மாதங்கள் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!


மேலும், SPW கல்லூரியின் கட்டிடக் கலைஞர் டாக்டர் கே ராஜேஸ்வரி மூர்த்திக்கு 'ஸ்ரீ பத்மாவதி வித்யா பிரகாசினி' விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. டாக்டர் மூர்த்தி 1954 மற்றும் 1974 க்கு இடையில் சுமார் இரண்டு தசாப்தங்களாக SPW கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். பல சீர்திருத்தங்களையும் முயற்சிகளையும் கொண்டு, கல்லூரியை மாநிலத்தில் பெண்களுக்கான சிறந்த கல்லூரியாக மாற்றுவதற்கான பாதையை அமைத்தார். அவரது சேவைகளுக்கு அடையாளமாக, TTD அவருக்கு தனித்துவமான இந்த விருதை வழங்கி கவுரவிக்கிறது.


மகளிர் தினத்தின் மாலையில் டிடிடியின் பெண் ஊழியர்கள் நடத்தும் நடனம், குறும்படங்கள், காவிய நாடகம், யோகா மற்றும் கலாச்சாரப் பொருட்கள் பார்வையாளர்களைக் கவரும். அசாதாரண திறமைகளை வெளிப்படுத்திய பெண் பணியாளர்கள், 2024-ல் ஓய்வு பெறவுள்ள பணியாளர்கள் மற்றும் முன்மாதிரியாக செயல்பட்ட சில ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் பத்மாவதி விருதுகள் இந்த விழாவில் வழங்கப்படுகின்றன. 


மேலும் படிக்க | குருவின் அருளால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம்


மேலும் படிக்க | திருப்பதி: திவ்ய தரிசன டிக்கெட் இவர்களுக்கு கிடைக்காது - தேவஸ்தானம் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ