தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை 20 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்திருந்தது. 


கடந்த பிப்ரவரி 16 அன்று இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் இந்த தகவலை வெளியிட்டனர். 


இந்நிலையில், நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஃபெலிக்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளது..! 


தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூன் 16 -ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடு தற்போது, ஜூன் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மீன்வளப் பல்கலைக்கழக சேர்க்கைக்கு www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.