தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) ஆனது தமிழ்நாடு தொழில்துறை துணைப் பணியில் வேதியியலாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜனவரி 23, 2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப்பணியிடங்கள்:
தொழில் மற்றும் வணிகத் துறையில் மொத்தம் 3 வேதியியலாளர் பணியிடங்களுக்கு TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


வயது வரம்பு:
ஜூலை 1, 2021 தேதிப்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிக வயது வரம்பு கிடையாது.


சம்பள விவரம்:
ரூ. 37,700 முதல் 1,19,500 வரை வழங்கப்படும்.


கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் வேதியியல் அல்லது வேதியியல் தொழில்நுட்பம் துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு அல்லது பயன்பாட்டு வேதியியல் அல்லது பகுப்பாய்வு வேதியியல் ஆராய்ச்சியில் அனுபவம் இருக்க வேண்டும்.


செயல் முறை தேர்வு:
தேர்வு இரண்டு நிலைகளில் செய்யப்படும், அதாவது, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


ஆட்சேர்ப்புத் தேர்வு:
ஆட்சேர்ப்புத் தேர்வு மார்ச் 19, 2022 அன்று இரண்டு அமர்வுகளாக நடைபெறும்: தாள் 1- காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை மற்றும் தாள் 2- 2.00 முதல் மாலை 5.00 வரை.


விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ. 150 மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஆன்லைன் ம்,மற்றும் வங்கி மூலம் செலுத்தலாம். ஒதுக்கப்பட்ட வகை விண்ணப்பதாரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை :
https://tnpsc.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 23/01/2022 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR