பிரபல இருசக்ர வாகனமான Royal Enfield ஆனது ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையினில் இரண்டு புதரக வாகனங்களை அறிமுகம் செய்கிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளைஞர்களின் மனதை வென்ற Royal Enfield தற்போது ராணுவ வீரர்களை வெல்ல வந்துவிட்டது. தனது இடி முழக்க சத்தத்தினால் பார்பவர்களை பிரமிக்க வைக்கும் Royal Enfield தற்போது இரணுவ வீரர்களின் உடைகளுக்கு ஏற்ற வகையில் புதிய ரகங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது விமான படை, ஆயுதப் படை வீரர்களின் சீறுடைகளுக்கு பொருந்தும் வகையில் இரண்டு வாகனத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.


'Royal Enfield Classic Signals' என பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனங்களில் ஒன்று 'Classic 350 Airborne Blue'(ராணுவப் படை) மற்றொன்று 'Classic 350 Stormrider Sand'(விமான படை) என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு வாகனங்களும் பிரத்தியேக எண் வரிசையினை கொண்டு களமிறங்கவுள்ளது. முந்தைய Royal Enfield வாகனங்களின் எண்கள், சக்கர மெக்கார்டில் இருப்பது தனிச்சிறப்பு. ஆனால் தற்போதைய புதவரவில் வாகன எண்கள், பெட்ரோல் டேங்க் பக்கவாட்டில் இடம்பெறுகிறது.



இந்த இரண்டு வாகனங்களும் ராணுவ வீரர்களுக்கான கௌரவ பதிப்புகள் என Royal Enfield நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனல்களை அறிமுகம் செய்யும் விதமாக இவ்வாகனங்களை குறித்த காட்சிப்பதிப்பினையும் Royal Enfield நிறுவனம் வெளியிட்டுள்ளது.