புதுடெல்லி. இந்திய கார் வாங்குபவருக்கு எரிபொருள் நுகர்வு தொடர்ந்து மிகப்பெரிய கவலையாக உள்ளது. வெவ்வேறு கார் பிரிவுகளில், வாகனங்களின் மைலேஜ் வித்தியாசமாக காணப்படுகிறது. ஆனால் இந்த நாட்களில் SUV கள் வாங்குவது அதிகம் காணப்படுகிறது. அதிலும், நடுத்தர அளவிலான SUV கார்கள் பிரபலமாகி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனால் தான், சமீபத்தில் சில வாகனங்கள் இந்த பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இன்னும் சில வாகனங்கள் வெளியிடப்பட உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், அதிக மைலேஜ் தருவதாக கூறும் இந்த செக்மென்ட்டின் அந்த 5 வாகனங்கள் எவை எனப்தைத் தெரிந்துக் கொள்ளுங்கள். இந்தப் பட்டியலில், அனைத்து வாகனங்களின் பெட்ரோல் பதிப்புகள் அல்லது ஹைப்ரிட் பதிப்புகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.


ஹோண்டா எலிவேட் - மைலேஜ்- 16.92 kmpl
இந்த வாகனத்தின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தால் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் எலிவேட்டின் மைலேஜ் குறித்து ஹோண்டா சமீபத்தில் கூறியுள்ளது. இந்தப் பிரிவில் 16.92 கிமீ மைலேஜ் தரும் புதிய வாகனம் இதுவாகும். 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸுடன் 121எச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை எலிவேட் வழங்குகிறது.


ஹூண்டாய் க்ரெட்டா - மைலேஜ்- 16.85 kmpl
115 ஹெச்பி, 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் எஞ்சின், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகிய இரண்டையும் கொண்ட க்ரெட்டா பெட்ரோல் எஞ்சின் கிடைக்கும். அதன் 1.4L டர்போ பெட்ரோல் எஞ்சின் மாறுபாடு நிறுத்தப்பட்டது மற்றும் 1.5L டர்போ பெட்ரோல் இன்னும் க்ரெட்டாவில் காணப்படவில்லை.


மேலும் படிக்க | Upcoming SUVs: இன்னும் சில மாதங்களில் ஹுண்டாய் மற்றும் கியா அறிமுகம் செய்யவுள்ள கார்கள்


கியா செல்டோஸ் 1.5 - மைலேஜ் - 17.35 kmpl
செல்டோஸ் வரம்பில் 115 ஹெச்பி, 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. க்ரெட்டாவைப் போலவே, இந்தக் கார் இரண்டு கியர்பாக்ஸ் விருப்பங்களுடனும் வருகிறது. நல்ல விஷயம் என்னவென்றால், 1.5 லிட்டர் எஞ்சின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் காணப்படும். செல்டோஸில் லிட்டருக்கு 16.65 கிமீ மைலேஜ் கிடைக்கும்.


ஸ்கோடா குஷாக்/வோக்ஸ்வேகன் டைகன் 1.0 TSI - மைலேஜ் - 18.23 kmpl
ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகிய கார்கள் இரண்டும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 115hp 1.0-லிட்டர் மூன்று சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதனுடன், ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் டெக்னாலஜி சேர்க்கப்படுவதும் காணப்படுகிறது, இதன் காரணமாக அதன் மைலேஜ் அதிகரிக்கிறது. இந்தக் கார், 18.23kmpl வரை மைலேஜ் வழங்கும் என்று ARAI புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


மாருதி கிராண்ட் விட்டாரா/டொயோட்டா ஹைரைடர் 1.5 ஸ்ட்ராங்-ஹைப்ரிட்  மைலேஜ் - 27.97 kmpl


மாருதியின் கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் முதலிடத்தில் உள்ளன. இந்த இரண்டு வாகனங்களும் வலுவான ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மைலேஜ் பற்றி பேசுகையில், நிறுவனம் 27.97kmpl என கூறப்படுகிறது. இரண்டு எஸ்யூவிகளும் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் எஞ்சினுடன் வருகின்றன. அவற்றின் பெட்ரோல் எஞ்சின் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் முறையில் முழு ட்ராஃபிக்கில் சிறிது தூரம் இந்த வாகனத்தை ஓட்டலாம்.


மேலும் படிக்க | Mahindra Thar: ஜூன் மாதம் அதிரடி தள்ளுபடிகள்: குஷியில் வாடிக்கையாளர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ