ஐவிஎஃப் சிகிச்சை வெற்றி தோல்வியடைவதற்கான காரணங்கள்..!
infertility : ஐவிஎப் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் வெற்றி தோல்விக்கான அடிப்படையான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
infertility : கருவுறாமை பிரச்சனை இருப்பவர்கள் ஐவிஎப் சிகிச்சை மூலம் கருத்தரிக்கலாம். ஆனால் இந்த சிகிச்சை முழுமையாக வெற்றியைக் கொடுக்குமா என்றால் இல்லை. இதற்கு வயது, உடல்நலம் மற்றும் பிற முக்கியமான காரணிகள் காரணமாக இருக்கின்றன.
குழந்தையின்மைக்கு எடுக்கும் ஐவிஎப் சிகிச்சை வெற்றி தோல்விக்கான காரணங்கள் :
1. வயது
IVF இன் வெற்றியை பாதிக்கும் மிக முக்கியமான மாறிகளில் ஒன்று வயது. 30 வயதுக்கும் மேல் சென்றாலே கருவுறதல் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. 35 வயதைக் கடக்கும்போது இந்த வாய்ப்பு மேலும் குறைகிறது. ஏனென்றால், ஒரு பெண்ணின் கரு முட்டை எண்ணிக்கை மற்றும் தரம் ஆகியவை வயதோடு நேரடியாக தொடர்பு கொண்டவை. பெண்ணின் பழைய கரு முட்டைகளை வைக்கும்போது கருச்சிதைவுகள் அதிகரிக்கின்றன.
மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
2. கருவின் தரம்:
கருக்களின் தரம் மற்றும் IVF ஆய்வகத்தின் நிலைமைகள் முக்கியமானவை. மரபணு சோதனை (PGT) மூலம் மரபணு குறைபாடுகளைக் கூட கண்டறிந்து கருவுறுதலின் வெற்றி விகிதத்தை மேம்படுத்தும். ஆனால் நீங்கள் மருத்துவம் எடுத்துக் கொள்ளும் IVF கிளினிக்கின் அனுபவம் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. உயர்தர ஆய்வக நடைமுறைகளைப் பின்பற்றினால் வெற்றியை பெறலாம்.
3. கருவுறாமைக்கான காலம் மற்றும் காரணம்:
ஒரு ஜோடி கருத்தரிக்க எப்படி முயற்சி செய்தும் கருத்தரிக்கவில்லை என்றால் அதற்கு பல காரணிகள் இருக்கின்றன. அதில் விவரிக்கப்படாத கருவுறாமை முக்கிய காரணமாக இருக்கின்றன. இதுகுறித்து மருத்துவர்களின் தீர ஆலோசனை பெற்ற தம்பதிகள் முடிவை எடுக்கலாம்.
4. கருப்பை
IVF இன் வெற்றிக்கு மிக முகியமான ஒன்று, ஒரு பெண்ணின் கருப்பை. இது ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே கரு தங்கும். அதனால் கருப்பை ஆரோக்கியம் குறித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று அதன் தரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.
5. வாழ்க்கை முறை காரணிகள்
போதைப்பொருள், மது மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றுக்கு அடிமையாதல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலை பாதிக்கலாம். புகைபிடிக்கும் ஆண்களுக்கு மோசமான தரமான விந்தணுக்கள் இருக்கலாம், அதே சமயம் புகைபிடிக்கும் பெண்களுக்கும் தரமில்லாத கருப்பை இருக்கலாம். இவை மோசமான IVF முடிவுகளைக் கொடுக்கும்.
மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ