Forbes பத்திரிகையின் வருடாந்திர கருத்துகணிப்பின் படி, உலகின் கோடிஸ்வரர் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி அமேசானின் ஜெஃப் பெஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப 766வது இடம் பிடித்துள்ளார். கடந்தாண்டு வெளியான பட்டியலில் அவர் 544வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Fornes அறிக்கையின்படி கடந்தாண்டு 3.5 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 3.1 பில்லியில் டாலராக குறைந்துள்ளது.


இந்த பட்டியலின் படி சுமார் 2208 பில்லினர்கள் உலகத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டை ஒப்பிடுகையில் 18% இந்த அளவு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் அமெரிக்காவில் 585 பில்லினர்களும், சீனாவில் 373 பில்லினர்களும் பட்டியலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பட்டியலில் முதல் 10 இடம் பிடித்துள்ள பில்லினர்கள்...


1. ஜெஃப் பெஸோஸ்


நிறுவனம்: CEO மற்றும் நிறுவனர், Amazon.com


நிகர மதிப்பு: $ 112 பில்லியன்


2. பில் கேட்ஸ்


நிறுவனம்: Cofounder, பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை


நிகர மதிப்பு: $ 90 பில்லியன்


3. வாரன் பபெட்


நிறுவனம்: தலைமை நிர்வாக அதிகாரி, பெர்க்ஷயர் ஹாத்வே


நிகர மதிப்பு: $ 84 பில்லியன்


4. பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம்


நிறுவனம்: தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, LVMH Moet Hennessy Louis Vuitton


நிகர மதிப்பு: $ 72 பில்லியன்


5. மார்க் ஜுக்கர்பெர்க்


நிறுவனம்: Cofounder, தலைவர் மற்றும் CEO, பேஸ்புக்


நிகர மதிப்பு: $ 71 பில்லியன்


6. அமனிடோ ஒர்டேகா


நிறுவனம்: இணை நிறுவனர் Inditex 


நிகர மதிப்பு: $ 70 பில்லியன்


7. கார்லோஸ் ஸ்லிம் ஹெல் & குடும்பம்


நிறுவனம்: கெளரவ தலைவர், அமெரிகா மோவில்


நிகர மதிப்பு: $ 67.1 பில்லியன்


8. சார்ல்ஸ் கோச்


நிறுவனம்: தலைமை நிர்வாக அதிகாரி, கோச் இன்டஸ்ட்ரீஸ்


நிகர மதிப்பு: $ 60 பில்லியன்


8. டேவிட் கோச்


நிறுவனத்தின்: நிர்வாக துணை தலைவர், கோச் இன்டஸ்ட்ரீஸ்


நிகர மதிப்பு: $ 60 பில்லியன்


10. லாரி எலிசன்


நிறுவனம்: CTO மற்றும் நிறுவனர், ஆரக்கிள்


நிகர மதிப்பு: $ 58.5 பில்லியன்