இந்தியாவில் போக்குவரத்து மாசால் 350000 குழந்தைகளுக்கு ஆஸ்துமா...
போக்குவரத்து மாசு காரணமாக இந்தியாவில் சுமார் 350000 குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது!
போக்குவரத்து மாசு காரணமாக இந்தியாவில் சுமார் 350000 குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது!
194 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் போக்குவரத்து மாசு காரணமாக அதிகளவு குழந்தைகள் பாதிக்கப்பட்ட நாடாக சீனா(760000 குழந்தைகள்) முதல் இடத்திலும், சீனாவை தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பதாக தெரிகிறது.
உலகில் அதிக அளவு குழந்தைகள் கொண்ட நாடு பட்டியலில் சீனா இரண்டாம் இடத்தில் இருப்பதாலும், காற்றில் மாசு ஏற்படுத்தும் நைட்ரஜன் டை ஆக்சைடு(NO2) அதிகளவு இருப்பதாலும் சீனா இப்பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ஐக்கிய நாடுகளில் உள்ள ஜார்ஜ் வாசிங்க்டன் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கையில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் 240000, இந்தோனேசியா 160000, பிரேசில் 140000 என வரிசையாக இடம்பிடித்துள்ளன.
இதுகுறித்தி ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைகழக இணை பேராசிரியர் சூசன் சி அன்னபெர்க் தெரிவிக்கையில்., இந்தியாவில் அதிக அளவு குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் நாட்டில் நிலவும் புகை மாசு. மும்பை போன்ற நகரங்களில் இருக்கும் வாகன நெருக்கடி, பயன்பாடு இயற்கை சூழலை கெடுக்கிறது, இதன் காரணமாக இந்திய குழந்தைகள் அதிக அளவில் ஆஸ்துமா பிரச்சனையினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
உலகளாவிய அறிக்கையின் படி ஆஸ்துமாவை உண்டாக்க 170 வகை போக்குவரத்து மாசு மூல காரணமாக அமைகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 13% குழந்தைகள் சராசரியான போக்குவரத்து மாசுவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தென் கொரியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 31% குழந்தைகள் போக்குவரத்து மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இங்கிலாந்தில் சுமார் 24% குழந்தைகள் போக்குவரத்து மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.
மாசுகளை அதிகளவு உண்டாக்கும் வாகனங்களுக்கு மாற்று வாகனங்கள் எ.கா மின்னனு வாகனங்கள், நைட்ரஜன் டை ஆக்ஸைடு உண்டாக்கும் வாகனங்களை கட்டுப்படுத்துதல் போன்றவை, மோட்டார் வாகனங்களுக்கு பதிலாக மிதிவண்டி போன்ற வாகனங்களை பயன்படுத்துதல் மாசுகளை கட்டுப்படுத்தும். மாசுகளை கட்டுப்படுத்துதலே குழந்தைகளுக்கான இந்த பாதிப்பினை குறைக்கும் என ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைகழக இணை பேராசிரியர் சூசன் சி அன்னபெர்க் குறிப்பிட்டுள்ளார்.