மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, DTH மற்றும் கேபிள் பயனர்கள் அவரவர் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய கட்டுப்பாடு விதித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் ஜனவரி 31-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய விதிமுறையின் படி பயனர்கள் தங்களுக்கு தேவையான தொலைக்காட்சி சேனல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அதற்கான கட்டணத்தை செலுத்தி கண்டு மகிழலாம். இந்த புதிய நடைமுறையின் படி சேனல்களை தேர்ந்தெடுக்க வசதியாக, TRAI புதிய வலைதளம் (https://channel.trai.gov.in/home.php) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 


TRAI அறிமுகம் செய்துள்ள இந்த பிரத்தியேக வலைதளத்தில், பயனர்கள் 5 வழிமுறைகளை கடந்து தாங்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதோடு அவற்றுக்கான கட்டணங்களையும் அறிந்து கொள்ளலாம்.


விரும்பிய சேனல்களை பயனர்களை தேர்ந்தெடுத்த பின்னர், அதற்கான கட்டணத்தில் இலவச சேனல்கள், கட்டண சேனல்கள், கட்டண சேனல்களுக்கு பயனர் செலுத்தும் கட்டணம், GST வரி மற்றும் DTH சேவை வழங்கும் நிறுவனத்திற்கு பயனர் செலுத்த வேண்டிய நெட்வொர்க் கட்டணம் உள்ளிட்டவை தனித்தனியே பட்டியலிடப்பட்டிருக்கும். 


TRAI அறிமுகம் செய்துள்ள இந்த புதிய விதிமுறையின் படி இலவச சேனல்களை கட்டாயம் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் படி இலவச சேனல்களுக்கான கட்டணம் ரூ.130 (வரி உள்ளிட்டவற்றை சேர்த்து ரூ.153.40) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாடிக்கையளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும்.