Indian Railways New Rule Latest Update Tamil : இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு குறித்து மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது. இந்த விதிமுறை ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது. அதாவது இவ்வளவு நாட்கள் பயணம் செய்வதற்கு 120 நாட்களுக்கு முன், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வந்த நிலையில், இனி அப்படி செய்ய முடியாது. ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் 60 நாட்களுக்கு முன்பாக மட்டுமே இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்திய ரயில்வே புதிய விதிமுறையை அக்டோபர் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரயில்வே புதிய விதிமுறை


இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான காலவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 120 நாட்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வந்த நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமலாகிறது. அதன்படி இனி நீண்ட தூர ரயில் பயணங்களுக்கு ரயில் முன்பதிவு டிக்கெட் 60 நாட்களுக்கு முன்பாக மட்டுமே பதிவு செய்ய முடியும். 60 நாட்கள் இருக்கும் வகையிலேயே டிக்கெட் முன்பதிவுக்கான ஆப்சனும் திறக்கும். அதனால், ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவை நீண்ட நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முடியாது. 


மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் புதிய விதிகள்! இனி இவர்களுக்கு மட்டுமே லோயர் பெர்த்!


ரயிலில் முன்பதிவு காலம் குறைப்பு


குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன்பாக மட்டுமே ரயில் பயணங்களுக்கான முன்பதிவு செய்ய முடியும். இந்த புதிய விதிமுறை நீண்ட தூரம் செல்லும் ரயில் பயணிகளுக்கு பாதகமாக அமையும். ஏனென்றால் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் 120 நாட்களுக்கு முன்பாக அதாவது நான்கு மாதங்களுக்கு முன்பே சொந்த ஊர் செல்லும் பயணத்தை திட்டமிட்டு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்துவிடுவார்கள். அவர்களுக்கும் டிக்கெட் கிடைப்பது எளிதாக இருக்கும். இப்போது நீண்ட தூரம் செல்பவர்கள் ரயிலில் முன்பதிவு மூலம் இருக்கை பெறுவது புதிய விதிமுறை மூலம் கடினமாகும்.  


ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?


ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளத்துக்கு செல்ல வேண்டும். செயலி மற்றும் இணையதளம் எதுவாக இருந்தாலும் அதில் உள்நுழைய Login Account வைத்திருக்க வேண்டும். இதுவரை உங்களுக்கு அக்கவுண்ட் இல்லை என்றாலும் முன்பதிவு செய்யும்போது புதிய அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ள முடியும். அதன்பிறகு நீங்கள் புறப்படும் இடம், சேரும்  இடம், பயண தேதி ஆகியவற்றை கொடுத்தால் அந்த தேதியில் செல்லும் ரயில்களின் விவரம் மற்றும் நேரம் காண்பிக்கும். பின்னர், இருக்கை விவரமும் காண்பிக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான ரயிலை தேர்வு செய்து ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘6’ விதிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ