Hello Summer Sale offer By IndiGo Airlines: விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இண்டிகோ விமான நிறுவனம் அசத்தலான ஆஃபரை கொண்டு வந்துள்ளது. குறைந்த கட்டண விமான சேவைகளை வழங்குவதில் புகழ் பெற்ற இண்டிகோ நிறுவனம் ஹலோ சம்மர் (Hello Summer) என்னும் சலுகையை அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணங்களுக்கு இந்த சலுகை பொருந்தும். இதன் சலுகையின் மூலம் ரூ.1199 கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யலாம். இந்த விற்பனை மே 29 முதல் தொடங்கப்பட்ட நிலையில், இதைப் பயன்படுத்துவதற்கான கடைசி வாய்ப்பு இன்று அதாவது மே 31, 2024 ஆகும். இந்தச் சலுகை ஜூலை 1 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான பயணங்களுக்குப் பொருந்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருக்கை தேர்வு கட்டணத்தில் 20% வரை சேமிப்பு


இண்டிகோ ஹலோ சம்மர் சலுகையின் கீழ் முன்பதிவு செய்வதற்கு இருக்கை தேர்வு கட்டணத்தில்  20% வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகை சில நிபந்தனைக்கு உட்பட்டது என்று விமான நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இருக்கை வசதியின் அடிப்படையில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கட்டண நிவாரணம் வழங்கப்படும். இது தவிர, மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த சலுகையை மற்ற தள்ளுபடி சலுகைகள்/விளம்பரச் சலுகைகளுடன் இணைக்க முடியாது, அதாவது நீங்கள் இந்தச் சலுகையைப் பெறுகிறீர்கள் என்றால், வேறு எந்தச் சலுகையையும் உங்களால் பெற முடியாது. தனியார் தொலைகாட்சி ஒன்றில் பேசிய இண்டிகோ நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை பிரிவின் தலைவர் வினய் மல்ஹோத்ரா, குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் இந்த சலுகை, குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


புதிய சேவைக்கு தயாராகி வரும் இண்டிகோ நிறுவனம்


சமீபத்தில், இண்டிகோ நிறுவனம் (IndiGo Airlines) இருக்கை தேர்வில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் கீழ் இணைய செக்-இன் போது, ​​பெண்கள் தங்களுக்கு அடுத்த இருக்கையில் ஒரு பெண் பயணி  பயணம் செய்கிறார்களா இல்லையா என்பதை சரிபார்க்க முடியும். இது சந்தை ஆராய்ச்சியின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டு #GirlPower உத்தியின் கீழ் முன்னோடி திட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் கீழ், பெண்களுக்கான இருக்கைகள் எங்கு உள்ளன என்பதை நீங்கள் பார்க்க முடியும், ஆனால் இது இணைய செக்-இன் போது மட்டுமே தெரியும். தனியாக பயணம் செய்யும் அல்லது குடும்பத்துடன் முன்பதிவு செய்யும் பெண்களுக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | நெல்லை டூ காசி - கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!!


பிஸினஸ் கிளாஸ் வகுப்பு விரைவில் அறிமுகம்


இண்டிகோ இந்த ஆண்டு சில வழித்தடங்களில் பிஸினஸ் கிளாஸ் என்னும்  வணிக வகுப்பைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் 60 சதவீத பங்கைக் கொண்டுள்ள விமான நிறுவனமாக இண்டிகோ நிறுவனம் உள்ள நிலையில், ஆனால் இப்போது வரை எகானமி கிளாஸ் மட்டுமே உள்ளது. இப்போது 18 வது ஆண்டு விழாவில், ஆகஸ்ட் மாதம் வணிக வகுப்பு குறிட்து அறிவிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்போது 360 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டுள்ள இந்த விமான நிறுவனம் ஒவ்வொரு நாளும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது.


மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ