இந்தியாவில் ட்ரெண்டாகும் ஸ்பீட் டேட்டிங் கலாசாரம்!
இந்தியாவில் தற்போது ட்ரெண்டாகா பரவிவரும் கலாச்சாரத்தில் ஒன்று ஸ்பீட் டேட்டிங்.ஸ்பீட் டேட்டிங்-னா என்ன என்கிறீர்களா?..... அப்போ இத மேல படிங்க!
இந்தியாவில் தற்போது ட்ரெண்டாகா பரவிவரும் கலாச்சாரத்தில் ஒன்று ஸ்பீட் டேட்டிங். இந்த ஸ்பீட் டேட்டிங்கின் முழுக்க முழுக்க மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து நம் நாட்டுக்குள் வந்தவை.
ஸ்பீட் டேட்டிங்-னா என்ன என்கிறீர்களா?..... அப்போ இத மேல படிங்க!
ஸ்பீட் டேட்டிங் செய்வதற்காகவே தனியாக இணையதளம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த டேட்டிங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் அந்த இணையத்தில் முன் பதிவு செய்ய வேண்டும். இந்த ஸ்பீட் டேட்டிங் நட்சத்திர ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்படுமாம்.
திருமணம் ஆகாத தங்கள் வாழ்க்கைத் துணையை தேடும் இளைஞர்கள் இதில் பங்கேற்று தங்களுக்கான துணையை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்பவர்களுக்கு 8 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதில் ஒருவரை ஒருவர் தங்களை குறித்து அறிமுகம் செய்து கொள்வார்கள். தங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளகிறார்கள்.
பெரும்பாலும் ஸ்பீட் டேட்டிங்கில் கலந்து கொள்பவர்கள் இது ஒரு நவீன சுயம்வரம் என சொல்லிக் கொள்கிறார்கள். நீங்கள் கலந்துக்கொண்ட அன்றே உங்கள் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஒன்னு போனா மற்றொன்று என்ற வாக்கியத்திற்கு ஏற்ப இந்த முறை இல்லையென்றால் அடுத்த முறை என்று தொடர்ந்து கொண்டே போகலாம். வாழ்க்கைத்துணை மட்டும் அல்ல நண்பர்களை கூட நீங்கள் இந்த ஸ்பீட் ஸ்டேட்டிங் மூலம் பெறலாம்.
மேற்கத்திய நாட்டு கலாச்சாரங்கள் மீது ஈர்ப்பு உள்ள இளைஞர்கள் இதனை அதிர்ச்சியாக எடுத்துக் கொள்ளவதில்லை. பெரும்பாலும் இதுபோன்ற இளைஞர்கள் மத்தியில் ஸ்பீட் ஸ்டேட்டிங்கிற்கு வரவேற்பு நிலவுகிறது.
ஆனால், இந்தியா போன்று பாரம்பரியம் மிக்க ஒரு நாட்டில் இந்த ஸ்பீட் டேட்டிங் கலாச்சாரம் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரியவில்லை. இது தனிநபர் சார்ந்த விஷயம் என்றாலும் இக்கலாச்சாரம் நாட்டுக்கு ஆரோக்கியமானதா என்பது குறித்து தெளிவில்லை. முகம் தெரியாத ஒரு நபருடன் வெறும் 8 நிமிட கலந்துரையாடலில் அவரை குறித்து என்ன புரிதல் ஏற்பட்டுவிடும்? நாம் அவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க.
சமூகத்தில் குடும்பங்களின் பங்கு மிக முக்கியமானது. உறவுகள் என்பது வெறும் வார்த்தைகள் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தனது வாழ்க்கை துணையைத் தேடிக்கொள்ளும் உரிமை ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டு. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஸ்பீட் ஸ்டேட்டிங் என்ற பெயரில் தேர்வு செய்வது கொடுமை. புதிதாக ஒரு விஷயத்தை பார்க்கும் போது, கேட்கும் போது அதன்மேல் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு. ஆனால் அவை நமக்கு உகந்ததா என்பதில் நாம் முதலில் தெளிவு வேண்டும்.
இது குறித்து நீங்கள் கேற்கலாம் ஒரு பெண் தனது வீட்டில் பார்க்கும் மாப்பிளையை தேர்வு செய்ய தேநீர் கொடுக்கும் இடைவேளை போதும் என்றல் இதுவும் அது போன்று தானே என்று.
ஆனால் நீங்கள் ஒன்று கருத்தில் கொள்ள வேண்டும் குடுப்பத்தினர் அதற்க்கு முன்னரே அவரை பற்றி தெரிந்த பிறகே தங்களின் பிள்ளைகளுக்கு வாழ்கை துணைகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று.