Turmeric Side effects Tamil | பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சள் தூளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், அதனை பலரும் சர்வலோக நிவாரணியாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு அத்தியாவசியமானவை, பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஊட்டச்சத்து மூலக்கூறுகள் அதில் இருக்கின்றன. அதற்காக மஞ்சளை எடுத்துக் கொள்வதாலேயே அந்த பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா? என்றால் நிச்சயம் இல்லை. சிறிய புண்களை ஆற்றும் வல்லமை உள்ளிட்ட சில நன்மை பயக்கக்கூடிய விஷயங்கள் அதில் இருக்கின்றன என்பதற்காக மஞ்சளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் பக்கவிளைவுகளையே எதிர்கொள்வீர்கள். அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளிட்ட பல சத்துக்களை கொண்டிருக்கும் மஞ்சளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதன் அதிகப்படியான நுகர்வு ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சளை அதிகம் எடுத்துக் கொண்டால் வரும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளுங்கள் : 


செரிமான கோளாறு


மஞ்சள் பித்த உற்பத்தியை அதிகரிக்கும். வயிற்றில் அமில அளவை அதிகரிக்கலாம். ஆயுர்வேத மருத்துவத்திலேயே கூட அதிகப்படியான மஞ்சள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சளை தொடர்ந்து உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தினாலும், அதிகப்படியான நுகர்வு செரிமான அமைப்பில் எரிச்சலை ஏற்படுத்தும். இது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD), அமில ரிஃப்ளக்ஸ் அல்லது பிற இரைப்பை குடல் கோளாறுகள் உள்ளவர்களை அதிகம் பாதிக்கலாம். அதனால், வெறுமனே மஞ்சள் உடலுக்கு நல்லது என எடுத்துக் கொள்ளாதீர்கள்.


மேலும் படிக்க | எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்


சிறுநீரக கற்கள்


மஞ்சளில் ஆக்சலேட்டுகள் உள்ளன, அவை பல்வேறு தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படும் இயற்கையான மூலப்பொருட்களாகும். பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் படி, அதிகப்படியான மஞ்சளை உணவில் சேர்த்து உட்கொள்ளும் போது, ஆக்சலேட்டுகள் உடலில் கால்சியத்துடன் பிணைக்கப்பட்டு, கால்சியம் ஆக்சலேட் படிகங்களை உருவாக்கி, சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. சிறுநீரக கற்களின் ஆபத்தையும், அதன் வலியையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இன்றைய மோசமான வாழ்க்கை முறையில் குழந்தைகளே கூட சிறுநீரக கற்கள் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.


இரும்புச்சத்து குறைபாடு


மஞ்சள், குறிப்பாக அதன் செயலில் உள்ள குர்குமின் கலவை, உடலில் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கும். Agricultural and Food Chemistry இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் அதிக அளவு நுகர்வு இரும்புச்சத்து உறிஞ்சுதலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விளைவு சில நபர்களில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு பங்களிக்கலாம், குறிப்பாக அதிக அளவு அல்லது நீண்ட காலத்திற்கு தொடர்ந்து உட்கொள்ளும்போது, இப்பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


தலைவலி மற்றும் தலைச்சுற்றல்


மஞ்சளில் உள்ள செயலில் உள்ள சேர்மமான குர்குமினை அதிக அளவு உட்கொள்வது தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். குர்குமினில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.


மஞ்சள் எவ்வளவு சாப்பிட வேண்டும்?


பொதுவான ஆய்வுகளின்படி, ஒரு நாளைக்கு 500 முதல் 2,000 மி.கி மஞ்சள் எடுத்துக் கொள்வது மட்டுமே ஆரோக்கியத்துக்கு நல்லது. அதுவும் உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. வெறுமனே மஞ்சள் சாப்பிடக்கூடாது. உணவில் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். ஆனால், அதில் கூட சரியான அளவு இருக்க வேண்டும். இல்லையென்றால் பின்விளைவுகளை சந்திப்பீர்கள்.


(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள், ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் தலைமுடி சார்ந்த நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)


மேலும் படிக்க | Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுகளை நீக்கி டீடாக்ஸ் செய்யும் ஆரோக்கியமான பழங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ