Fruits for Liver Health: காற்றில் உள்ள மாசுபாடு மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் நமது நுரையீரலை பாதிக்கின்றன. இந்த பிரச்சனைகள் காரணமாக, தூசி, அழுக்கு மற்றும் நச்சுகள் நுரையீரலில் குவிந்து, சுவாச அமைப்பின் செயல்பாட்டை பாதித்து பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. ஆகையால், நுரையீரலில் இருக்கும் நச்சுகளை நீக்கி அதை பாதுகாப்பாக வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
சில இயற்கையான வழிகளில் நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கலாம். அவற்றில் பழங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. நுரையீரலில் உள்ள நச்ச்சுகளை நீக்கி, அவற்றை ஆரோக்கியமாக வைக்க உதவும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த பழங்கள் உடலை சுத்தப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், சுவாசத்தின் புத்துணர்ச்சியையும் பராமரிக்கின்றன. இந்தப் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மாசு மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நுரையீரலைப் பாதுகாக்கலாம். நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அந்த பழங்களின் பட்டியல் இதோ.
எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நுரையீரலில் உள்ள நச்சுகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் நுரையீரல் தொற்றுகளையும் இது தடுக்கிறது. வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிப்பதால் சுவாச மண்டலம் மேம்படும். மேலும் நுரையீரலில் இருந்து தூசி மற்றும் பிற மாசுகளை வெளியேற்றவும் இது உதவுகிறது.
திராட்சை
திராட்சைப்பழத்தில் பைட்டோ கெமிக்கல்கள், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. நுரையீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க இது உதவுகிறது. இந்த பழம் நுரையீரலில் வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது சுவாசக் குழாயை சுத்தப்படுத்துகிறது. திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் என்ற தனிமம் சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைத்து நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க | மூளை சுறுசுறுப்பாக இருக்க.... உதவும் பயிற்சிகளும்... உணவுகளும்
ஆப்பிள்
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் ஒரு சிறந்த பழமாக உள்ளது. ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை நுரையீரலை சுத்தமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற உதவுகிறது. மேலும் இது சுவாச பிரச்சனைகளையும் குறைக்கிறது.
பப்பாளி
பப்பாளியில் உள்ள 'பப்பைன்' என்சைம் சுவாச மண்டலத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இது நுரையீரலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றது. மேலும் இதனை உட்கொள்வதன் மூலம் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியையும் வெளியேற்ற முடியும். பப்பாளியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை நுரையீரலில் வீக்கம் மற்றும் தொற்றுநோயைக் குறைக்க உதவுகின்றன.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளது. இது நுரையீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த நொதி சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் இது நுரையீரலில் இருந்து, அங்கு சேகரிக்கபட்டுள்ள சளியை அகற்ற உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களைத் தடுக்கிறது. நுரையீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க அன்னாசிப்பழம் நல்லதாக கருதப்படுகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உங்களுக்கு டஸ்ட் அலர்ஜி இருக்கா? இந்த வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ