7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் செய்தி உள்ளது. விரைவில் அவர்களுக்கு இரண்டு நல்ல அறிவிப்புகள் கிடைக்கவுள்ளன. வரும் மாதங்களில் அவர்களது சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். மாதங்கள் செல்லச் செல்ல சம்பளம் கூடும். எந்த ஒரு புதிய ஃபார்முலாவும் தற்போது வரப்போவதில்லை. ஆனால் நீண்ட நாட்களாக ஊழியர்களுக்கு இருந்த ஒரு கனவு தற்போது அகவிலைப்படி அதிகரிப்பால் நிறைவேறப் போகிறது. 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி ஜூலை மாதத்தில் அதிகரிக்கப் போகிறது. பின்னர் 6 மாதங்களுக்குப் பிறகு அகவிலைப்படி (DA) மீண்டும் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களின் சம்பளத்தின் முழு கணக்கீடும் மாறும். இதை பற்றி இந்த பதிவில் பிரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டு வாடகை கொடுப்பனவு அதிகரிக்கும்


அகவிலைப்படியுடன், மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் உயரும். ஏனெனில், ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டியவுடன், எச்ஆர்ஏ -வும் திருத்தப்படும் என்றும் அரசாங்கம் ஏற்கனவே ஒரு அறிவிப்பில் கூறியுள்ளது. ஜூலை 2023 இல், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி.


HRA: அடுத்த திருத்தம் எப்போது?


தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) 42 சதவீதமாக உள்ளது. ஜனவரி-ஜூன் 2023 -க்கான குறியீட்டு எண்கள் வெளியான பிறகு, ஜூலை முதல் அகவிலைப்படி அவ்வளவு அதிகரிக்கும் என்பது முடிவு செய்யப்படும். அகவிலைப்படி 4% அதிகரிக்கலாம் என்பது இதுவரை வந்துள்ள எண்களின் மூலம் தெளிவாகிறது. டிஏ உயர்வுடன், மற்ற கொடுப்பனவுகளிலும் ஏற்றம் இருக்கும். இவற்றில் பெரியது வீட்டு வாடகை கொடுப்பனவு.


கடந்த முறையும் எச்ஆர்ஏ -வில் திருத்தம் செய்யப்பட்டது


2021 ஆம் ஆண்டில், ஜூலைக்குப் பிறகு. அகவிலைப்படி 25 சதவிகிதத்தை தாண்டியவுடன் எச்ஆர்ஏ -வில் திருத்தம் செய்யப்பட்டது. ஜூலை 2021 இல், அரசாங்கம் அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தியது. தற்போதுள்ள எச்ஆர்ஏ விகிதங்கள் 27%, 18% மற்றும் 9% ஆகும். எச்ஆர்ஏ -வில் அடுத்த திருத்தம் எப்போது செய்யப்படும் என்பது தான் ஊழியர்களின் மத்தியில் உள்ள பெரிய கேள்வியாக உள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: வருகிறது 8வது ஊதியக்குழு, 50% டிஏ, ஊதிய உயர்வு.... ஊழியர்கள் ஹேப்பி!!


HRA: வீட்டு வாடகை கொடுப்பனவு எப்போது அதிகரிக்கும்?


DoPT இன் மெமோராண்டத்தின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவில், அகவிலைப்படி உயர்வின் அடிப்படையில் திருத்தம் செய்யப்படுகிறது. நகரத்தின் வகையின்படி, எச்ஆர்ஏ 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. இந்த உயர்வு 1 ஜூலை 2021 முதலான அகவிலைப்படி உயர்வுடன் அமலில் உள்ளது. 2015 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணையின்படி, அகவிலைப்படியுடன் எச்ஆர்ஏ -வும் அவ்வப்போது திருத்தப்படும். இப்போது அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும்போது அந்த திருத்தம் மீண்டும் நடக்க வேண்டும். 


HRA 3% அதிகரிக்கும்


வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 7வது ஊதியக் குழுவின் கீழ் 3% ஆக இருக்கும். எச்ஆர்ஏ தற்போதுள்ள அதிகபட்ச விகிதமான 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும். ஆனால், அகவிலைப்படி 50% -ஐ அடையும் போதுதான் இது நடக்கும். DA 50% -ஐ தாண்டும்போது, ​​எச்ஆர்ஏ 30%, 20% மற்றும் 10% ஆக உயரும். X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வீட்டு வாடகை கொடுப்பனவு வகை உள்ளது. எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்கள் 27% எச்ஆர்ஏ பெறுகிறார்கள். இது டிஏ 50% ஆனால், 30% ஆக உயரும். அதே சமயம், ஒய் வகுப்பினருக்கு எச்ஆர்ஏ 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு மக்களுக்கு 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.


HRA அதிகரிப்பால் மொத்த தொகை எவ்வளவு அதிகரிக்கும்?


7வது சம்பள கமிஷன் மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 56,900 ரூபாய் ஆகும். அதன் எச்ஆர்ஏ 27 சதவிகிதம் என்ற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. 


எளிமையான கணக்கீட்டின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம்:


HRA = ரூ 56,900 x 27/100 = ரூ 15,363/மாதம்
30% HRA = ரூ 56,900 x 30/100 = ரூ 17,070/மாதம்
HRA இல் மொத்த அதிகரிப்பு = ரூ 1,707/மாதம்
ஆண்டு HRA அதிகரிப்பு = ரூ 20,484


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஜாலிதான்.... அதிரடி டிஏ ஹைக் நிச்சயம்.. உற்சாகத்தில் ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ