அரசு மருத்துவமனையில் டிக்டோக் வீடியோ எடுத்த இரண்டு மருத்துவ மாணவர்கள் இடைநீக்கம் செய்துள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹைதராபாத்தில் உள்ள அரசு காந்தி மருத்துவமனையில் பயிற்சி பெரும் இரண்டு மாணவர்கள் வேலை நேரத்தில் மருத்துவமனை வளாகத்திற்குள் டிக்டோக் வீடியோக்களை எடுத்ததற்காக கடந்த  வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


டிக்டோக் வீடியோ எடுத்த மாணவர்கள் இருவரும் பயிற்சி தொழில்நுட்ப வல்லுநர்கள். நோயாளிகள் இல்லாதபோது இருவரும் மருத்துவமனையில் நான்கு வீடியோக்களை எடுத்துள்ளனர். வீடியோக்களை உருவாக்கும் மாணவர்கள் தங்கள் மாணவர்கள் அல்ல, ஆனால், பிசியோதெரபி துறையில் பயிற்சி பெற்ருவரும் இவர்கள் இருவரும் வெவ்வேறு தனியார் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் என்று மருத்துவமனை கூறியுள்ளது.


"வீடியோவில் காணப்படும் மாணவர்கள் பிசியோதெரபி துறையில் பயிற்சி பெற்றவர்கள், அவர்கள் பிற கல்லூரிகளில் இருந்து பயிற்சி பெற மருத்துவமனைக்கு வந்தவர்கள்" என்று காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரவன்குமார் டெக்கான் குரோனிகலிடம் தெரிவித்தார். "இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்," என்று அவர் கூறினார்.


மாணவர்களை இடைநீக்கம் செய்ததையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் பிசியோதெரபி துறை பொறுப்பாளருக்கு ஒரு குறிப்பை வெளியிட்டார். "வழக்கமாக பயிற்சியாளர்கள் மருத்துவமனையில் ஆறு மாதங்கள் செலவிடுகிறார்கள், ஆனால் இந்த இருவருமே மூன்று மாதங்களுக்குப் பிறகு கல்லூரியில் தங்கள் துறைத் தலைவருக்கு ஒரு கடிதத்துடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வீடியோக்கள் மருத்துவமனை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தபின் ஒழுக்காற்று நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரு உள்ளது" என டாக்டர் ஜெயகிருஷ்ணா தெரிவித்தார்.


சமீபத்தில், கம்மம் மாநகராட்சியில் (KMC) பணிபுரியும் 11 அவுட்சோர்ஸ் ஊழியர்கள் இதே போன்ற வீடியோ எடுத்ததில் சிக்கினர். அந்த வீடியோக்கள் வைரலாகி, கே.எம்.சி அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன. இந்த சம்பவம் தொடர்பாக ஆத்திரமடைந்த கே.எம்.சி கமிஷனர் ஊழியர்களை மாற்றினார். அலுவலகத்தில் டிக்டோக் வீடியோக்களை தயாரிப்பதற்கான ஒழுக்காற்று நடவடிக்கையாக அவர்கள் அம்பலம் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.