தேசிய கல்வித் தகுதி தேர்வு 2018 (National Eligibility Test 2018) முடிவுகளை இன்று மத்திய மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய மதிப்பீட்டு வாரியத்தால் கடந்த ஜூலை 8 மற்றும் ஜூலை 22 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட தேசிய கல்வித் தகுதி தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 27-ஆம் நாள் இந்த தேர்வின் வினாக்களுக்கான விடைகள் வெளியாகி சர்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டிற்கான UGC NET  தேர்வானது., 91 நகரங்களில் 2,082 மையங்களை கொண்ட நடத்தப்பட்டது,. இந்த தேர்வில் 84 பாடப்பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1148235 தேர்வாளர்கள் பங்கேற்றனர். இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளில் அதிகப்படியான தேர்வாளர்கள் பங்கேற்ற தேர்வு இந்த தேர்வு தான் என்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய மதிப்பீட்டு வாரியத்தால் நடத்தப்படும் இந்த UGC NET தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வாளர்கள் இந்திய கல்லூரிகளில் துனைப் பேராசிரியராக பணியமர்த்தப்பட தகுதிப்பெற்றவர்களாய் கருதப்படுவர். மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெரும் தேர்வாளர்கள் JRF எனப்படும் உதவித்தொகையினை தங்கள் கல்லூரியில் இருந்து பெருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


UGC NET 2018 முடிவுகளை பார்பது எவ்வாறு?


  • CBSE-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in என்ற இணையப்பம் செல்லவும்.

  • பின்னர் CBSE - UGC Net Examination - July 2018 என்ற இணைப்பினை கிளிக் செய்யவும்.

  • தேர்வாளரின் பதிவு எண், வரிசை எண் மற்றும் பிறந்த நாள் ஆகிய தகவல்களை உள்ளிடவும்.

  • பின்னர் Submit என்னும் பொத்தானை கிளிக் செய்யவும்.

  • காண்பிக்கப்படும் தேர்வு முடிவினை அச்சிட்டு பெற்றுக்கொள்ளவும்.