புதுடில்லி: இன்றைய காலகட்டத்தில், ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணம். அரசுப் பணிகள் முதல் வங்கி அல்லது பிற முக்கியமான பணிகள் வரை ஆதார் வைத்திருப்பது கட்டாயமாகும். மேலும், ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நாம் அனைவரும் புதுப்பிப்பது மிகவும் முக்கியம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI) அவ்வப்போது ஆதார் தொடர்பான அனைத்து வகையான  தகவல்களையும் புதுப்பிப்பிக்கும் சேவையை அளித்து வருகிறது. இதற்கிடையில், UIDAI சமீபத்தில் ஆதார் தொடர்பான இரண்டு சேவைகளை காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. இதன் தாக்கம் அனைத்து ஆதார் அட்டைதாரர்களிடமும் இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகவரி சரிபார்ப்பு கடிதம் (Address Validation Letter)


மேலதிக உத்தரவுகள் வரும் வரை முகவரி சரிபார்ப்பு (Aadhaar adress change) கடிதம் மூலம் ஆதார் அட்டையில் முகவரியைப் புதுப்பிக்கும் வசதியை UIDAI நிறுத்தியுள்ளது. வாடகை வீட்டில் இருப்பவர்கள், குத்தகைதாரர்கள் அல்லது பிற ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இதன் மூலம் தங்கள் முகவரியை எளிதாக புதுப்பிக்க முடியும். முகவரி சரிபார்ப்பு கடிதம் (Address Validation Letter)) மூலம் புதுப்பிக்கும் வசதியை வழங்கும் ஆப்ஷனையும் UIDAI தனது வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது. 'மேலதிக உத்தரவுகள் வரும் வரை முகவரி சரிபார்ப்பு கடிதத்தில் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக UIDAI கூறியுள்ளது. 


செல்லுபடியாகும் முகவரி சான்றுகளின் பட்டியல் தொடர்பாக ஆதார் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து, எந்தவொரு முகவரி ஆதாரத்தின் மூலமும் உங்கள் முகவரியைப் புதுப்பிக்கலாம். 


பட்டியல் விபரத்திற்கான லிங்க்


(https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf) 


இந்த முடிவின் மூலம், ஆதார் அட்டையில் உள்ள முகவரியைப் புதுப்பிப்பதில் மக்களுக்கு சிக்கல் ஏற்படும். குறிப்பாக வாடகைக்கு வசிப்பவர்கள் அல்லது வேலை காரணமாக பிற இடங்களுக்கு மாறுபவர்கள் இப்போது ஆதார் முகவரியைப் புதுப்பிப்பது கடினம். முகவரியை மாற்றுவதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லாதவர்களுக்கு, அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையும் இருக்கலாம். 


ALSO READ | Aadhaar Card Language Update: தமிழ் மொழியில் ஆதார் அட்டை பெற எளிய செயல்முறை இதோ


பழைய முறையில் ஆதார் அட்டையை மறுபடி பிரிண்ட் எடுக்கும் (Aadhaar Card Reprint) சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது


பழைய பாணியில் ஆதார் அட்டையை மறுபடி பிரிண்ட் செய்யும் சேவையை யுஐடிஏஐ நிறுத்தியுள்ளது. இப்போது பழைய அட்டைக்கு பதிலாக, UIDAI பிளாஸ்டிக் PVC Card வெளியிடுகிறது. இந்த அட்டை உங்களுடன் கொண்டு செல்ல எளிதானது. ஒரு கிரெடிட் கார்டை போல் இது இருக்கும். எல்லா இடங்களிலும் ஆதார் அட்டை தேவை. அத்தகைய சூழ்நிலையில், இப்போது நீங்கள் இந்த புதிய அட்டையை எளிதில் பாக்கெட் மற்றும் வாலெட்டில் வைத்துக் கொள்ளலாம். 


ட்விட்டரில் ஒரு பயனரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ஆதார் உதவி மையம் (Aadhaar Help Centre )இந்த தகவலை ட்வீட் செய்து 'Order Aadhaar Reprint’ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஆன்லைனில் Aadhaar PVC Card ஆர்டர் செய்யலாம். அதே நேரத்தில், நீங்கள் விரும்பினால், நீங்கள் E-Aadhaar-ஐ பிரிண்ட் செய்து காகித வடிவத்தில் வைத்துக் கொள்ளலாம் என ட்வீட் செய்துள்ளது. 


ALSO READ: ஒரே மொபைல் எண் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC Aadhaar Card-ஐ பெறலாம்: வழிமுறை இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR