Aadhaar Card: ஆதார் அட்டையில் இத்தனை வகைகளா... உங்களுக்கு ஏற்றது எது...
Types of Aadhaar Card: ஆதார் அட்டை விவரங்கள்: UIDAI மொத்தம் 4 வகையான ஆதார் அட்டைகளை வழங்குகிறது. இந்த நான்கு வகையான ஆதார்களும் செல்லுபடியாகும். இதனைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்...
இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. உங்கள் வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதும் கட்டாயம் என்ற விதி உள்ளது. வங்கியில் வேலை முதல், அரசு திட்டங்களின் பலனைப் பெற என எல்லா இடங்களிலும் தேவை. அட்டைதாரரின் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் போன்ற அனைத்து வகையான தகவல்களும் ஆதாரில் உள்ளன. UIDAI (இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம்) 4 வகையான ஆதார் அட்டைகளை வழங்குகிறது. இந்த நான்கு வகையான ஆதார்களும் செல்லுபடியாகும். இதனைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்...
1. ஆதார் கடிதம் (Aadhaar Letter)
ஆதார் கடிதம் என்பது ஒரு காகித அடிப்படையிலான லேமினேட் கடிதம். இது வெளியிடப்பட்ட தேதி மற்றும் அச்சிடப்பட்ட தேதியுடன் பாதுகாப்பான QR குறியீட்டைக் கொண்டுள்ளது. புதிய பதிவு அல்லது தேவையான பயோமெட்ரிக் தகவல்கள் புதுபிக்கப்படும் போது, ஆதார் கடிதம் என்னும் கடிதம் வழடிவிலான ஆதார் வழக்கமான அஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். உங்கள் ஆதார் கடிதம் தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, UIDAI இணையதளத்திற்குச் சென்று விண்ணபிப்பதன் மூலம், ஆதார் கடிதத்தை மீண்டும் பெறலாம். ஆன்லைனில் இதற்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும். அதன் பிறகு, இந்திய அஞ்சல் துறையின் ஃபாஸ்ட் போஸ்ட் சேவை மூலம் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட உங்கள் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.
2. ஆதார் பிவிசி கார்டு (Aadhaar PVC Card)
ஆதாரின் சமீபத்திய பதிப்பு ஆதார் பிவிசி கார்டு. வங்கி அட்டை போல் பிளாஸ்டிக் அதாவது பிவிசியினால் தயாரிக்கப்பட்ட ஆதார் அட்டைகள் டிஜிட்டல் கையொப்பங்கள் கொண்டது. இது பல பாதுகாப்பு அம்சங்களுடன் டேம்பர் ப்ரூஃப் QR குறியீடு, புகைப்படம் போன்ற விவரங்களுடன் அட்டை தாரரின் தனிப்பட்ட விபரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதனைப் பெற uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் ஆதார் எண், மெய்நிகர் ஐடி அல்லது பதிவு ஐடியைப் பயன்படுத்தி ரூ. 50/- கட்டணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தியா போஸ்ட்டின் ஸ்பீட் போஸ்ட் சேவையைப் பயன்படுத்தி ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் முகவரிக்கு ஆதார் பிவிசி கார்டு டெலிவரி செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோ
3. இ-ஆதார் (eAadhaar )
கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள eAadhaar என்பது ஆதார் அட்டையின் மின்னணு பதிப்பாகும், அதன் டிஜிட்டல் முறையில் சரிபார்க்க பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆஃப்லைன் சரிபார்ப்பிற்கான ஆதார் பாதுகாப்பான QR குறியீடும் உள்ளது. உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து இ-ஆதார்/ மாஸ்க் இ-ஆதாரை எளிதாகப் பதிவிறக்கலாம். மாஸ்க் செய்யப்பட்ட இ-ஆதார் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே காட்டுகிறது. ஒவ்வொரு ஆதார் பதிவு அல்லது புதுப்பித்தலிலும், eAadhaar தானாகவே உருவாக்கப்படும். இ-ஆதாரை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
4. எம்- ஆதார் (mAadhaar)
mAadhaar என்பது UIDAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ மொபைல் செயலி. செயலியில், மக்கள்தொகை தகவல் மற்றும் ஆதார் எண்ணுடன் புகைப்படம் உள்ளது. இது ஆஃப்லைன் சரிபார்ப்பிற்காக ஆதார் டேம்பர் ப்ரூஃப் QR குறியீட்டின் வசதியைக் கொண்டுள்ளது. eAadhaar போலவே, இதையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ