22 கிராமங்களில் 20 லட்சம் மரங்களை நட்டு பராமரித்து வரும் தெலங்கானா பெண்மணியை யுனெஸ்கோ கௌரவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருபுறம், பூகோள வெப்பமயமாதலால் முழு நாடும், உலகமும் கலக்கமடைந்து தொடர்ந்து கூட்டங்களை நடத்துகின்றன, மறுபுறம் இந்தியாவின் தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பாஸ்தாபூர் கிராமத்தில் வசிக்கும் சில்கப்பள்ளி அனுசயம்மா 22 கிராமங்களில் 20 லட்சம் மரங்களை நட்டு நல்வழி காண்பித்துள்ளார்.


அவற்றை நடவு செய்வதோடு, அதை பராமரித்து வருவதையும் தனது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அவரது இந்த பணிக்காக யுனெஸ்கோ அவரை கௌரவித்துள்ளது.
 
தனது வாழ்க்கையை கவனித்துக்கொள்வது மட்டுமல்லாமல், நிலத்தின் ஆரோக்கியத்தைப் பற்றியும் கவலைப்பட்ட ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட அங்கிகாரமாக இது பார்க்கப்படுகிறது. மேலும் அவரது கதை மிகவும் போராட்டம் மற்றும் ஊக்கமளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்., "இது எனக்கு ஒரு கற்பனை போன்று உள்ளது. இந்த மதிப்புமிக்க விருதை என்னால் பெற முடியும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை" என தெரிவித்துள்ளார். சங்கரெட்டி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அனுசயம்மாவை அவரது அமைப்பு டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி (டி.டி.எஸ்) கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தெலுங்கானா மாவட்டமான சங்கரெடியில், சிலகப்பள்ளி அனுசயம்மா, 20 லட்சம் மரங்களை நடும் ஒரு பாராட்டத்தக்க வேலையைச் செய்துள்ள நிலையில், அவருக்கு உலகம் முழுவதும் அங்கீகாரம் கிடைத்தது, மேலும் அவருக்கு தற்போது யுனெஸ்கோவால் சிறப்பு விருதும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.