UPSC உதவி பேராசிரியர், உதவி பொறியாளர், மருத்துவ அதிகாரி மற்றும் பிற பணிகளுக்ககான ஆட்சேர்ப்பு 2020:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியிடங்கள் காலியாகியுள்ளன.  UPSC பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்களைப் பற்றி தெரிவித்துள்ளது. உதவி பேராசிரியர், உதவி பொறியாளர், மருத்துவ அதிகாரி, கட்டிடக் கலைஞர் உள்ளிட்ட பல பதவிகளில் அரசு வேலை பெற அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.


இதற்காக, UPSC தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான upsc.gov.in இல் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களின் (Vacancies) விவரங்கள், தேவையான லிங்குகள் ஆகியவை இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளன.


காலி இடங்களின் விவரங்கள்:


மருத்துவ அதிகாரி / ஆராய்ச்சி அலுவலர் - 36 காலி இடங்கள்


உதவி பொறியாளர் - 3 காலி இடங்கள்


ஸ்பெஷலிஸ்ட் க்ரேட் 3  - உதவி பேராசிரியர் - 60 காலி இடங்கள்


மூத்த அறிவியல் அதிகாரி - 21 காலி இடங்கள்


கட்டிடக் கலைஞர் (குரூப் A) - 1 இடம்


மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை - 121


விண்ணப்பத் தகவல்:


இந்த ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் பங்குகொள்ள, UPSC-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய தேதி - 24 ஜூலை 2020.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி - 13 ஆகஸ்ட் 2020


ஆன்லைன் விண்ணப்பத்தை ப்ரிண்ட் செய்வதற்கான கடைசி தேதி - 14 ஆகஸ்ட் 2020


விண்ணப்பக் கட்டணம்:


SC, ST, பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பம் இலவசம். மற்ற அனைத்து வகை வேட்பாளர்களும் விண்ணப்ப கட்டணமாக 25 ரூபாய் செலுத்த வேண்டும்.


அத்தியாவசிய தகுதிகள்:


வெவ்வேறு பதவிகளுக்கு வெவ்வேறு கல்வித் தகுதிகள் கோரப்பட்டுள்ளன. UPSC வலைத்தளத்தில் இருக்கும் அறிவிப்பில் இது குறித்த விரிவான தகவல்களைப் பெறலாம்.


வயது வரம்புகளும் வெவ்வேறு பதவிகளுக்கு வெவ்வேறாக உள்ளன.


மருத்துவ அதிகாரி - 35 வயது


உதவி பொறியாளர் - 30 வயது


உதவி பேராசிரியர் - 40 வயது


மூத்த அறிவியல் அதிகாரி - 35 வயது


கட்டிடக் கலைஞர் - 40 வயது


இடஒதுக்கீட்டு விதிகளின்படி, பலருக்கு பலவித தளர்வுகளின் நன்மையும் கிடைக்கும்.


ALSO READ: வேலை தேடுபவரா நீங்கள்?.... RBI-யில் வேலை செய்ய ஒரு அறிய வாய்ப்பு...