முந்துங்கள் மக்களே...! மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பர்ட்....

மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு, பரிசு என அனைத்து வித சேவைகளையும் வாரிவழங்கும் மேடோ நிறுவனம்!
மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு, பரிசு என அனைத்து வித சேவைகளையும் வாரிவழங்கும் மேடோ நிறுவனம்!
டொக்யோவில் மெட்ரோ ரெயிலை தினமும் 7.2 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் தான் இதில் அதிகம். இதனால், மெட்ரோவில் கூட்டம் அலைமோதும். அதுவும் பீக் நேரங்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காது இருக்கும்.
இந்த பீக் நேர கூட்டத்தை குறைக்க டொக்யோ மெட்ரோ நிர்வாகம் புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பீக் நேரங்களை தவிர்த்து சில மணி நேரங்களுக்கு முன் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துவோர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். 2000 பேர் பீக் நேரங்களுக்கு முன் மெட்ரோ ரெயிலை உபயோகித்தால், டெம்புரா என்னும் உணவு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
அதுவே 2500 உபயோகித்தால், சொபா வழங்கப்படுகிறது. 3000 பேருக்கு மேல் பீக் நேரங்களுக்கு முன் மெட்ரோவை உபயோகித்தால், சொபா மற்றும் டெம்புரா வழங்கப்படுகிறது. இதன் மூலம் பீக் நேரங்களில் கூட்டம் குறையும் என டொக்யோ மெட்ரோ நிர்வாகம் எண்ணுகிறது.
கிழக்கு டொக்கியோவையும் சிபாவையும் இணைக்கும் டொசாய் லைன் தான் மக்கள் கூட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறது. இந்த லைனில் காலை 7.50 முதல் 8.50 –க்குள் 76000 பயணிகள் பயணிக்கின்றன. இது, 199 சதவிகிதம் அதிகமாகும்.
அடுத்த ஆண்டு டொக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்ப்பெறவுள்ளது. அதற்குள் இந்த பீக் நேர மக்கள் கூட்டத்தை குறைக்க ஜப்பானிய அரசு பல திட்டங்களை வகுக்கிறது.