தந்தையின் துயர் தீர்க்க ஆண்களாய் மாறிய இளம்பெண்கள்...
குடும்ப வருமையை போக்கவும், உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையின் உயிரை காக்கவும் உபி-யை சேர்ந்த இளம்பெண்கள், ஆண் வேடமிட்டு முடிதிருத்த கடை நடத்திவரும் சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குடும்ப வருமையை போக்கவும், உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையின் உயிரை காக்கவும் உபி-யை சேர்ந்த இளம்பெண்கள், ஆண் வேடமிட்டு முடிதிருத்த கடை நடத்திவரும் சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேரந்த ஜோதி குமாரி(18), நேஹா(16) என்னும் இரு இளம்பெண்கள், ஆண்களை போல் வேடமணிந்து கடந்த நான்கு ஆண்டுகளாக முடிதிருத்தம் கடை நடத்தி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களது தந்தை உடல்நலம் நலிவுற்று மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் நடத்திவந்த முடிதிருத்தம் கடையும் முடங்கியுள்ளது. குமாரி, நேஹா-வின் குடும்பத்திற்கு இருந்த ஒரே வருமாண மூலம் இந்த முடிதிருத்த கடை தான் என்பதாலும், தந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் தேவை என்பதாலும், தங்களது பெண் என்னும் சமூக அடையாளத்தை மாற்றிக்கொண்டு தந்தையின் முடிதிருத்த கடையினை செயல்படுத்தி வருகின்றனர்.
தீபக் மற்றும் ராஜூ என பெயர் மாற்றிக்கொண்டு முடிதிருத்த கடையினை நடத்தி வரும் குமாரி, நேஹா குறித்து அப்பகுதியில் இருக்கும் 100 குடியிருப்பு வாசிகளுக்கு மட்டுமே இவர்கள் பெண்கள் என தெரியும்,. வெளியூரில் இருந்து வந்து முடிதிருத்தம் செய்து செல்லும் நபர்களுக்கு இவர்கள் இருவரும் தீபக் மற்றும் ராஜூ தான்.
தினமும் 400- 500 வரை வருமாணம் ஈட்டும் இச்சகோதரிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக பிற்பகல் மட்டுமே கடையை நடத்தி வருகின்றனர். காலை வேலையில் தங்களது படிப்பினை தொடர்வதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் அறிந்த மாநில ஆளுயர் இளம்பெண்களை ஊக்கிவிக்கும் வகையில் கௌரவ பரிசு அளித்துள்ளது!