புதுடெல்லி: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (Power System Operation Corporation Limited (POSOCO)) 40 காலியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உதவி மேலாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது Power System Operation Corporation Limited.


கல்வித் தகுதி: M.E/ M.Tech/ MS/ M.Sc, B.E/ B.Tech/ B.Sc ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
சம்பளம்: ஒரு மாதத்திற்கு ₹60T–₹1.8L 
பணி நிலைமை: முழுநேரம்


மேலும் படிக்க | கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்: 261 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பிக்க காலக்கெடு: விண்ணப்ப போர்ட்டல் மே 24, 2022 அன்று 00:00 மணிநேரத்திற்கு திறக்கப்படும். ஜூன் 23, 2022 அன்று 23:45 மணிவரை விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் கடைசித் தேதியான 23 ஜூன் 2022க்குள் விண்ணப்பிக்கவும்.


ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை நிர்ணயிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இறுதி நாட்களில் சர்வர்களில் அதிக ட்ராஃபிக்கைத் தவிர்ப்பதற்காக கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. .


மேலும் படிக்க | CDS-II பணிகளுக்கு 339 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு


POSOCO நிறுவனம் பற்றிய சிறு குறிப்பு: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO), தேசிய பவர் கிரிட் ஆபரேட்டர் மற்றும் மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம் ஆகும்.


POSOCO அறிவுப் பகிர்வை எளிதாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளது, அதன் ஊழியர்கள் பல்வேறு தளங்களில் மாணவர்கள் மற்றும் சகாக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்கள். 


POSOCO நிறுவனம், தொழில்துறை-கல்வித்துறை ஒத்துழைப்புக்காக சிறந்த மையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் தனிநபர்களின் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.


மேலும் படிக்க | இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தயார்


POSOCO நிறுவனம், இளம் மற்றும் ஆற்றல் மிக்க நபர்களை தேடுகிறது. POSOCO யாரையும் அவர்களது பயோடேட்டா/ ரெஸ்யூமின் பலத்தின் அடிப்படையில் பணியமர்த்துவதில்லை. அவர்களது திறமை மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே வேலைகளை போசோகோ வழங்குகிறது.


"விண்ணப்ப செயல்முறையைத் தொடர்வதற்கு முன், எப்படி விண்ணப்பிப்பது என்ற வழிமுறைகளை விண்ணப்பதாரர்கள் தெரிந்துக் கொண்டு விண்ணப்பிப்பது நல்லது. 


Power System Operation Corporation Limited நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் விரிவான தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | Job Alert: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு TANGEDCO வழங்கும் வேலைவாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQY