வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 5.30 மணியளவில் பரமபத வாசலை கடந்து சென்று பக்தர்களுக்கு, ரத்தின அங்கி, வைர பூணூல், கிளி மாலையுடன் நம்பெருமாள் அருள்பாலித்தார். ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் இன்று இரவு வரை எழுந்தருள்வார்.


அந்த வகையில் இன்று வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பெருமாள் கோயில்களில் கோலாகலமாக நடைபெற்றது. சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிவிக்க அதிகாலை 2 மணி முதலே பக்தர்கள் காத்திருந்தனர். 


சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தி பரவசத்துடன் காத்திருந்த பக்தர்கள், பார்த்தசாரதியை கண்டதும், கோவிந்தா... கோவிந்தா என முழக்கம் எழுப்பி வழிபட்டனர்.


அதேபோல் வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் ‘கோவிந்தா’ கோ‌‌ஷம் எழுப்பி சொர்க்கவாசல் வழியாக நுழைந்து மூலவர், உற்சவரை தரிசனம் செய்தனர்.


 



 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.