நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்களுக்கு படிப்பதே வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவாகும். வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கடந்த18-ம் தேதி வெகு விமரிசையாகத் துவங்கியது. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதன் அதிகாலையில் சொர்க்கவாசல் வழியாக வருவதே சொர்க்கவாசல் திறப்பு என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெருமாள் திருத்தலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் சொர்க்கவாசல் நிகழ்வு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளிட்ட வைணவத் திருதலங்களில் இன்று காலை 5 மணியளவில் திறக்கப்பட்டது.


வைகுண்டக் கதவுகள் திறந்து பரந்தாமன் தரிசனம் கிடைப்பதே மார்கழி மாதத்தில்தான் என்பது நம்பிக்கை. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கடந்த 18-ம் தேதி துவங்கியது.


முதல் 10 நாட்களுக்கு நடைபெற்ற பகல்பத்து எனும் திருநாள் நேற்றுடன் நிறைவடைந்தது. அடுத்த 10 நாட்களுக்கு நடைபெறும் ராப்பத்து எனும் திருநாள் இன்று துவங்குகிறது.


இந்நிலையில், அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டு கோவிலின் பிரகாரத்தில் உலாவந்து பின் காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.