உலகை ஆளும் சிவபெருமான் மக்களின் நோய்களை தீர்க்கும் மருத்துவராக, வைத்தியனாக அருள் பாலிக்கும் இடம்தான் வைத்தீஸ்வரன் கோயில். தமிழகத்தில் சிவபெருமானுக்கு இருக்கும் முக்கிய சிவ தலங்களில் வைத்தீஸ்வரன் கோயில் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வைத்தீஸ்வரன் கோயில் 16 ஆவது தலமாகும். வைத்தீஸ்வரன் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைத்தீஸ்வரன் கோயிலில் சிவபெருமானும் (Lord Shiva) உமயாளும் வைத்தியநாதராகவும் தையல்நாயகி அம்மையாகவும் அருள் பாலிக்கிறார்கள். இங்கு சிவபெருமானின் தமயனான முருகப்பெருமான் முத்துக்குமார சுவாமியாக காட்சி தருகிறார். 


சுயம்புவாக ஈசன், சுபம் தரும் தாயார்:


வைத்தியநாத சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக வீற்றியிருக்கிறார் . இந்த கோயிலில் அனைத்து நவகிரகங்களும் ஈசனின் பின்புறத்தில் ஒரே நேர்கோட்டில் உள்ளனர். சிவபெருமானுக்கு அடங்கி நவகிரகங்கள் உள்ளதால் சிவனை பிரார்த்திப்பவர்களின் தீய கிரக பலன்கள் நீக்கப்பட்டு அவர்கள் தோஷங்களில் இருந்து நிவர்த்தி அடைகிறார்கள். இங்குள்ள மரகத லிங்கத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. தாயார் தையல்நாயகிக்கு மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொண்டால் தீராத வயிற்று வலி தீரும், குழந்தைகளின் பாலா தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.  


நவக்கிரக தலம்:


வைத்திஸ்வரன் கோயில் ஒரு நவக்கிரகத் (Navagraham) தலமாகவும் உள்ளது. ஒன்பது கிரகங்களில் ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்காரகனையும் சேர்த்து வழிபடும் தலமாக வைத்தீஸ்வரன் கோயில் உள்ளது. அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கோள் என்பது குறிப்பிடத்தக்கது. 


நோய் தீர்க்கும் ஈசன்


வைத்தியனாக இங்கு அருள் பாலிக்கும் சிவபெருமான், மக்களை அனைத்து வித நோய் நொடிகளிலிருந்து காத்து அருள் பொழிகிறார். வைத்தீஸ்வரன் கோயில் வந்து வேண்டிக்கொண்டால், நம்மைப் பற்றிய நோய்களெல்லாம் நொடியில் ஓடிவிடும் என்பது உறுதி. இங்கு அளிக்கப்படும் விபூதி பிரசாதத்தில் உள்ள விபூதி உருண்டைகள் நம் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் விரட்டி அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ALSO READ: ராவணனின் மறுபக்கம்: அரக்கனுக்குள் ஒரு அறிஞன், பத்து தலைகளுக்குள் பல்லாயிரம் கலைகள்!!


நாடி சோதிடம்


பழம்பெரும் சோதிடக் கலையான நாடி சோதிடத்தின் ஒரு முக்கிய இடமாக வைத்தீஸ்வரன் கோயில் இருந்து வருகிறது. நாடு முழுவதிலியோருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் தங்கள் நாடி சோதிட பலன்களைத் தெரிந்துகொள்ள மக்கள் இங்கு வருவதுண்டு. 


சித்தாமிர்தக் குளம்


வைத்தீஸ்வரன் கோயிலில் அமைந்திருக்கும் குளம் சித்தாமிர்தக் குளம் என்று அழைக்கப்படுகிறது. இக்குளத்தின் நீர் நோய் தீர்க்கும் புனித நீராகக் கருதப்படுகின்றது. இங்கு நீராடினால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். தோல் வியாதி உள்ளவர்களோ, அவர்களுக்காக வேண்டிக்கொண்டு மற்றவர்களோ மிளகு மற்றும் கல் உப்பு வாங்கி இங்கு கரைத்தால் வியாதி உடனே குணமாகும். 


சாலை, ரயில் மூலம் இங்கு செல்லலாம்


வைத்தீஸ்வரன் கோயில் சிதம்பரத்திலிருந்து (Chidambaram) 22 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தை ரயில் மூலம் அடைய மயிலாடுதுறையை சென்றடைய வேண்டும். மைசூரிலிருந்து மைசூர் விரைவு ரயிலில் பெங்களூர், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மார்க்கமாக மயிலாடுதுறையை அடையலாம்.


ALSO READ: இலங்கையில் சிவபெருமான் அழகாய் குடிகொண்டு அருள் பாலிக்கும் கோயில்கள்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR