9 நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய கால அட்டவணை

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதி சுற்றுவட்டாரத்தில் அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெறலாம்,.

Last Updated : Mar 25, 2021, 12:10 AM IST
  • ஜாதக தோஷங்கள் நிவர்த்தி பெறும் வழி என்ன?
  • 9 நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய முடியுமா?
  • முடியும், இதோ கால அட்டவணை
9 நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய கால அட்டவணை title=

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதி சுற்றுவட்டாரத்தில் அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெறலாம்,.

1, திங்களூர் (சந்திரன்):
ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்க வேண்டியது திங்களூர்தான். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். காலை 5.00 மணிக்கு கும்பகோணத்திலிருந்து கிளம்ப வேண்டும். திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம்.

2, ஆலங்குடி (குரு ஸ்தலம்) :
தரிசனம் நேரம்:1 மணி நேரம்
காலை 7.30மணி

திங்களூரில் இருந்து 30 நிமிடத்தில் ஆலங்குடிக்கு சென்று விடலாம். ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள்  சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு  8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

3, திருநாகேஸ்வரம் (ராகு ஸ்தலம்) :
தரிசனம் நேரம்:1 மணி நேரம்
காலை 9.30

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருக்கிறது. 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலத்திற்கு சென்றுவிடலாம். நாகநாதசுவாமி ஆலயம் விஸ்தீரணமானது என்பதால் தரிசனத்திற்கு சற்று நேரம் எடுக்கலாம்.     

Also Read | சிவன் எதற்காக ஏன், எப்போது  மூன்றாவது கண்ணைத் திறந்தார்? சத்குரு விளக்கம்

4, சூரியனார் கோவில் (சூரியன் ஸ்தலம்) :
தரிசனம் நேரம்:1 மணி நேரம்
மதியம் 11.00மணி

10.30க்கு புறப்பட்டு கும்பகோணம் வழியாக 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 30 நிமிடம் போதும்.  11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலுல்க்குச் சென்று சிவசூரியநாராயணரை தரிசிக்கலாம். இந்தக் கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்த பிறகு கஞ்சனூர் கிளம்பலாம்.

5, கஞ்சனூர் (சுக்கிரன் ஸ்தலம்) :
தரிசனம் நேரம்:1 மணி நேரம்
மதியம் 12.15

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். அதற்கேற்றாற் போல விரைந்து தரிசனம் செய்ய வேண்டும்.

Also Read | சிவலிங்கத்தை தினமும் பூஜை செய்வதற்கான காரணம் தெரியுமா?   

6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய் ஸ்தலம்) :
தரிசனம் நேரம் :1 மணி நேரம்
மாலை 4மணி

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே நண்பகல் 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் தரிசனத்திற்கு திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறைக்கு சென்று மதிய உணவை உண்டு ஓய்வெடுக்கலாம்.
பின்னர் 4 மணிக்கு கோயில் நடை திறந்த பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பிவிட வேண்டும்.  

7, திருவெண்காடு (புதன் ஸ்தலம்) :
தரிசனம் நேரம்: 45 நிமிடம் 
 

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிடத்திற்குள்  தரிசித்துவிட்டு 6.00 மணிக்கு3 கிளம்ப வேண்டும்.

8, கீழ்பெரும்பள்ளம் (கேது ஸ்தலம்) :
தரிசனம் நேரம்: 45 நிமிடம் நேரம்
மாலை 6.15மணி

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில்அடைந்து விடலாம். 45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

9, திருநள்ளாறு (சனி) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
இரவு 8.00மணி

நவகிரக ஸ்தலங்களில் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகமாக சென்றால்  8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம்  தரிசிக்கலாம்.

ALSO READ | Happy Birthday கார்த்திக் சுப்புராஜ் என வாழ்த்துமழை பொழியும் வெள்ளித்திரை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News